என் மலர்
நாமக்கல்
- சேந்தமங்கலம் ரோடு, செல்லப்பா காலனி பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.
- இங்கு சாம்பிராணி தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பஞ்சாயத்து, கூச்சிக்கல் புதூரை சேர்ந்தவர் கவுதம். இவர் சேந்தமங்கலம் ரோடு, செல்லப்பா காலனி பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் இங்கு சாம்பிராணி தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார். இரவு பணி முடிவடைந்து, தொழிற்கூடத்தை அவர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று விடுமுறையானதால், தொழிற் கூடத்தை திறக்கவில்லை.
இந்த நிலையில் மதியம் அவரது தொழிற் கூடத்தில் தீப்பிடித்து புகை கிளம்பியது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் இது குறித்து, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்கூடத்தில் இருந்து எந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழிற்கூட்டத்தில் ஏற்பட்ட, மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர்.
- விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூரை அடுத்த வாழவந்தி அருகே தீயில் காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
- சம்பவத்தன்று இளம்பெண் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ பிடித்ததால் கருகி பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித் தொழி லாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள்ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நீலாவதி கடந்த 17-ம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ குபுவென வெளியேறி நீலாவதி அணிந்திருந்த துணியில் பிடித்தது.
தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. அவருடைய அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர்,கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநா யகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்க ளில் சதுர்த்தியை முன்னி ட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தினசரி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிம்மம், ஹனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அடுத்தமாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்ய உள்ளனர். இதையொட்டி மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. 5-ந் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஏப்ரல் 6-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- தமிழகம் மற்றும் வெளிமாநி லங்களை சேர்ந்த வியாபாரி கள், எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். தமிழகம் மற்றும் வெளிமாநி லங்களை சேர்ந்த வியாபாரி கள், எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 24.63 குவிண்டால் எடை கொண்ட 6,705 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.90-க்கும், சராசரி விலையாக ரூ.25.25-க்கும் என மொத்தம் ரூ.58ஆயிரத்து 24-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 235.49 குவிண்டால் எடை கொண்ட 488 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.89-க்கும், சராசரி விலையாக ரூ.80.30-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.86-க்கும், சராசரி விலையாக ரூ.75.10-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 85ஆயிரத்து 243-க்கு விற்பனையானது.
எள்
74.55 1/2 குவிண்டால் எடை கொண்ட 101 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.166.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.146.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.39-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.158.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.151.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும் என மொத்தம் ரூ.11லட்சத்து 47ஆயிரத்து 775-க்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
171.43 குவிண்டால் எடை கொண்ட 521 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.50-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.39-க்கும், சராசரி விலையாக ரூ.75.50-க்கும் என மொத்தம் ரூ.12லட்சத்து 62ஆயிரத்து 501-க்கு விற்ப னையானது. இதையடுத்து சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வார ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.42 லட்சத்து 53 ஆயிரத்து 543-க்கு விற்பனையானது.
- கணேசபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார்.
- 164 முதலீட்டாளர்களிடம் ரூ. 6 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 579 வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் உள்ள துறையூர் சாலையில் நகராட்சி மன்றம் அருகே கணேசபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். அந்த நிறுவனம் 6 விதமான செல்போன் முதலீடு திட்டங்கள் இருப்பதாக கூறி வாடிக்கையா ளர்களிடம் பணத்தை வசூல் செய்தது.
இந்த நிலையில் குறித்த நேரத்தில் பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் கொடுத்தார்.
அதில் அந்த தனியார் நிறுவனத்தில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி வரை 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததா கவும், இதில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை திரும்பத் தராமல் செந்தில்குமார் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து பொருளா தார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில், செந்தில்குமார், அழகர், ராமச்சந்திரன், தேவி, மணி, லாயா என்கிற சசிகலா, கார்த்திக், கனகா, ஆறுமுகம் மற்றும் பிரபாகரன் உட்பட சிலர் 164 முதலீட்டாளர்க ளிடம் ரூ. 6 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 579 வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட கார்த்தி, கனகா, ஆறுமுகம், பிரபாகரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை கைது செய்ய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். மார்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 11.22 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.
- மோக னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். மார்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 11.22 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.
2023-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை நெல் 10,415 எக்டர், சிறுதானி யங்கள் 79,624 எக்டர், பயறு வகைகள் 11,252 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 33,235 எக்டர், பருத்தி 4,286 எக்டர் மற்றும் கரும்பு 10,300 எக்டர் என மொத்தம் 1,49,112 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 635 எக்டர், கத்திரி 590 எக்டர், வெண்டை 419 எக்டர், மிளகாய் 367 எக்டர், மரவள்ளி 15722 எக்டர், வெங்காயம் 4549 எக்டர், மஞ்சள் 1729 எக்டர் மற்றும் வாழை 2590 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுகளை தயாரிப்பதைத் தடுக்கும் வகையில், கேட்ட ரிங் சமையல் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் மாவட்டத்தின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பினை, நாமக்கல் மாவட்ட இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யப்படும்.
முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பி னர்களுக்கு திருமண உதவி, முதியோர் ஓய்வூதியம் விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தும் வகையில் விவசாயிகள் மற்றும் வேளாண் கூலித் தொழிலாளிகள் கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் கீழ் உறுப்பி னராக சேர்ந்து கொள்ள லாம் என கலெக்டர் தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
வெளிநடப்பு
கூட்டத்தில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக விவசாய முன்னேற்றக்கழம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள், நாமக்கல் மாவட்டம் மோக னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு மாவட்ட கலெக்டர் விளக்கம் அளிக்க மறுத்ததால், திரளான விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த னர். கூட்டத்தில், டி.ஆர்.ஓ மணிமேகலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநர் துரை சாமி, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதி காரிகள் கலந்துகொண்ட னர்.
- ஆனங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது.
- ஒரு பண்ணை குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம் ஆனங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஆனங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஒரு பண்ணை குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் (ஆனங்கூர் கிராம பண்ணை குடும்பங்கள் மட்டும்) வீதம் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.
ஆகையால் அனைத்து விவசாயிகளும் வந்து தென்னங்கன்றுகளை பெற்றுக் கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தென்னங்கன்றுகள் இலவசமாக பெறுவதற்கு சிட்டா, ஆதார் நகல், ரேசன் அட்டை நகல், 1 போட்டோ மேலும் தங்களது தொலை பேசியை கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
- பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடு விற்குள் ஆணைகள் வழங்க வேண்டும்.
நாமக்கல்:
அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்படும் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் விதித்திருந்த அரசாணையை உடன் வழங்க வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடு விற்குள் ஆணைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தி லும், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறையில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என சுமார் 130 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட தாசில்தார் அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக, மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் வரு மான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
- பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு சமுதாய மக்களின் குடிபாட்டு கோவிலாக உள்ளது.
- 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து சமய அறநி லையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்குட்பட்ட திடுமல்புதூரில் அப்பச்சிமார், ராக்கி யண்ணன், பேச்சியம்மன் கோவில் உள்ளது. இது பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு சமுதாய மக்களின் குடிபாட்டு கோவிலாக உள்ளது.
700 ஆண்டுகள் பழமை
சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து சமய அறநி லையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் ஆலோசனை பெறப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கோவிலை சிறப்பாக கட்டி முடிக்க திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டுமென கூறினர். மற்றோரு பிரிவினர் திருப்பணி கமிட்டி அமைக்கா மல் தாங்களே முன்னின்று கோவிலை கட்டி முடிப்ப தாகவும் தெரிவித்தனர். இரு தரப்பினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கூட்டம் முடிவுற்றது.
சுற்றுச்சுவர் இடிப்பு
இந்நிலையில் திருப்பணி கமிட்டி அமைக்க முன்வராத தரப்பினர், இந்து சமய அறநிலையத் துறைக்கும், கமிட்டி அமைக்க கோரிய தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்காமல் கோவிலின் சுற்றுசுவர் மற்றும் பெரும்பா லான பகுதிகளை இடித்து பாலாலயம் செய்யும் பணி களை மேற்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த, இந்து சமய அறநி லையத்துறையின் பரமத்தி வேலூர் தாலுகா கோவில் ஆய்வாளர் ஜனனி, நல்லூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
6 பேர் மீது வழக்கு
அதன்பேரில் திடுமல் பகுதியை சேர்ந்த சசிகுமார், லட்சுமணன், பாலசுப்பிர மணி மற்றும் ஈரோடு மாவட்டம் அமராவதிபுதூரை சேர்ந்த சந்திரசேக ரன், ரமேஷ், சின்னசாமி ஆகியோர் மீது இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கோவிலை, அனுமதி இல்லாமல் இடித்து திருப்ப ணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
- ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அள வில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.13 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்கிறது.
அதே சமயத்தில் சிப்சுக்கு பயன்படுத்தும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.16ஆயிரத்துக்கு விற்கிறது.
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர் நோய் தாக்கு தலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தற்போது பரமத்தி வேலூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை பெரும்பாலும் முடிந்து விட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் மரவள்ளி கிழங்கு வாங்கி ஜவ்வரிசி ஆலைக்கு சப்ளை செய்கிறோம். நடப்பாண்டு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்க்காத அளவு லாபம் கிடைத்துள்ளது என்றனர்.






