தீயில் காயம் அடைந்த இளம் பெண் சாவு

பரமத்திவேலூரை அடுத்த வாழவந்தி அருகே தீயில் காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார். சம்பவத்தன்று இளம்பெண் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ பிடித்ததால் கருகி பலியானார்.
தீயில் காயம் அடைந்த  இளம் பெண் சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித் தொழி லாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள்ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நீலாவதி கடந்த 17-ம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ குபுவென வெளியேறி நீலாவதி அணிந்திருந்த துணியில் பிடித்தது.

தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. அவருடைய அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com