search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tapioca"

    • கடந்த ஆண்டு ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
    • ஓராண்டு பயிரான குச்சிக்கிழங்கு ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் விலை போகிறது.

    திருப்பூர் :

    கடந்த ஆடி பட்டத்தில் சாகுபடி செய்த மரவள்ளி தற்போது அறுவடை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. ஆனால், பல விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்ய விரும்பிய போதும் விதைக்கரணைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக சாகுபடி பரப்பு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தற்பொழுது மரவள்ளிக்கு நல்ல விலை கிடைப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:- ஓராண்டு பயிரான குச்சிக்கிழங்கு ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. ஆள் தட்டுப்பாட்டை சமாளிக்க மரவள்ளி சாகுபடி செய்கிறோம். நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.சராசரியாக ஏக்கருக்கு 10 டன் கிடைத்தால் கூட லாபம் தான். சிப்ஸ் தயாரிப்பாளர்கள் பெருமளவில் கொள்முதல் செய்கின்றனர். தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில் மரவள்ளிக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு குச்சிக்கிழங்கு சாகுபடி அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
    • தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, சிறுநல்லிக்கோவில், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், பெரியமருதூர், சின்னமருதூர், ஆனங்கூர், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியா பாரிகள் அதிக அளவில் மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை யானது.

    தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைவாலும், ஜவ்வ ரிசி விலை அதிகரிப்பாலும் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
    • ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.

    ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அள வில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.13 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்கிறது.

    அதே சமயத்தில் சிப்சுக்கு பயன்படுத்தும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.16ஆயிரத்துக்கு விற்கிறது.

    மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர் நோய் தாக்கு தலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

    தற்போது பரமத்தி வேலூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை பெரும்பாலும் முடிந்து விட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் மரவள்ளி கிழங்கு வாங்கி ஜவ்வரிசி ஆலைக்கு சப்ளை செய்கிறோம். நடப்பாண்டு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்க்காத அளவு லாபம் கிடைத்துள்ளது என்றனர். 

    ×