பரமத்திவேலூர் பகுதியில்மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
பரமத்திவேலூர் பகுதியில்மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, சிறுநல்லிக்கோவில், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், பெரியமருதூர், சின்னமருதூர், ஆனங்கூர், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியா பாரிகள் அதிக அளவில் மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை யானது.

தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைவாலும், ஜவ்வ ரிசி விலை அதிகரிப்பாலும் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com