என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Contingent Leave Struggle"

    • அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
    • பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடு விற்குள் ஆணைகள் வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்படும் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் விதித்திருந்த அரசாணையை உடன் வழங்க வேண்டும்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடு விற்குள் ஆணைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் மாவட்டத்தி லும், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறையில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என சுமார் 130 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதனால் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட தாசில்தார் அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக, மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் வரு மான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

    ×