என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
- கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.
இதைக்கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த வாரம், கல்லூரிக்குள் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை முன்பு மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி முதல்வர், மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரி களிடம் சொல்கிறோம் என்று கூறினார்.
அப்போது போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. இந்த நிலையில் நேற்று திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் அமைக்க இருக்கும் தொழில்நுட்ப பூங்காவினை மாற்று இடத்தில் அமைக்க கோரியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரியும் சங்க நிர்வாகி யாழினிபிரியா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். பின்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் முயற்சியினை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்கக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
- மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
- இந்த மருத்துவ மனையின் ஒரு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையின் ஒரு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம் முழுவ தும் இருந்து தினசரி ஏராளமான பெண்கள் பிரசவத்திற்கு வருகின்றனர்.
இந்த நிலையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலி தொல்லை அதிகம் உள்ள தாக அங்கு குழந்தையுடன் சிகிச்சை பெறும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரசவம் முடிந்து பச்சிளம் குழந்தைகளுடன் வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களின் உடைமைகள், குழந்தைகளுக்கான மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவு பொருட்களை அங்கு உலவும் எலிகள் கடித்து நாசம் செய்கின்றன.
எலிகளின் கழிவுகள் குழந்தைகளின் மெத்தை விரிப்புகளில் பட்டு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்து வமனை நிர்வாகத்தினர் எலி தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
- ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
- மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், எங்கள் மனுக்காள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால் போராட்டங்கள் நடத்துவோம் என்றார். இதில் நிர்வாகிகள் குமார், குழந்தை வேல், மூர்த்தி, சுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார்.
- உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் அடுத்த நரவலூரைச் சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர், நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-
எனது முதல் கணவர் நோயால் பாதிக்கப்பட்ட தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதையடுத்து ராஜேஷ் என்பவரை 2-வது திரும ணம் செய்து கொண்டேன்.
தற்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்நிலையில், என் மாமியாரும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து, என்னை அடித்து துன்புறுத்துகின்ற னர். மேலும் எனது கணவரின் ஆண் நண்பர் என்னை தவறான தொடர்புக்கு அழைக்கிறார்.
மேலும், வயிற்றில் உள்ள குழந்தை என்னுடையது இல்லை. அதனால், அதனை கலைத்துவிடும்படி கூறி கணவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். அதனால் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன்.
இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறினார். தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை, போலீசார், சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
- அருகிலே இருந்த கொட்ட கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகி யவை எரிந்து நாசமானது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டில் கடந்த
21-ந் தேதி இரவு வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இதில் குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்ட கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகி யவை எரிந்து நாசமானது.
இதே நாளில் ஜேடர்பா ளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கூரை வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்கள், வடகரை யாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் மண் எண்ணை குண்டுகளை வீசி சென்றனர்.
இதையடுத்து, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலை யரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீ சார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய வடகரை யாத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தர்மராஜ் (30), ஜேடர்பா ளையம் அருகே கரைப்பா ளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் என்கிற பரமசிவம்(28), அதே பகுதியைச் சேர்ந்த கோட்டையப்பன் மகன் சுதாகர் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் விசாரணை நடந்து வருகிறது.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 13-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகிறது.
- தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 13-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 7 மாணவ, மாண வியர் எழுதுகின்றனர். மேலும், 357 பேர் தனித்தேர்வர்கள், 146 மாற்றுத்திறனாளி மாண வர்களும் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு முடி விலும், வெளி மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்படும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத் தாள்கள், நாமக்கல் மாவட்டத்தில், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நி லைப் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டன் வைக்கப்பட்டு உள்ளன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற ஏப்ரம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட த்தில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நி லைப்பள்ளி, குருசாமிபா ளையம் வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் திருத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேற்பார்வையில், இதற்கான முகாம் அலுவலர்கள் நிய மிக்கப்பட்டு, விடைத் தாள்கள் திருத்தும் பணிக்கு தேவையான முன்னேற்பாடு கள் நடைபெற்று வருகிறது.
- நன்செய் இடையார் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 12-ந் தேதி இரவு ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
- திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மகாமாரியம்மன் கோயில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 12-ந் தேதி இரவு ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மகாமாரியம்மன் கோயில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
தினந்தோறும் இரவு கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19-ந் தேதி இரவு மறு காப்பு கட்டுதலும்,அன்று இரவு முதல் 25-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 26-ந் தேதி இரவு வடி சோறு படைத்தல் நிகழ்ச்சியும், நேற்று அதிகாலை (திங்கட்கி ழமை) கோயில் முன்பு 62 அடி நீளமுள்ள பூ குண்டம் வெட்டப்பட்டு பூ போடப்பட்டது.அதனை தொடர்ந்து மதியம் 2- மணிக்கு மேல் ராஜா கோயிலில் இருந்து மணிவேல் புறப்பட்டு மகாமாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் தீமிதி விழா தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
தமிழகத்திலேயே மிக நீளமான பூக்குண்டமாக கருதப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஆண் பக்தர்கள் தீ மிதித்தும், சுமார் 30 ஆயிரம் பெண்கள் பூ வாரிபோடும் விழாவிலும் கலந்து கொண்டு தங்க ளது நேர்த்திக்கடனை செலுத்தி னர்.அதனை தொடர்ந்து இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை கிடா வெட்டும் நிகழ்ச்சி யும்,மாலை மாவிளக்கு பூஜை மற்றும் அழகு போடுதல், அக்னிசட்டி எடுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது.
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கருதி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.மேலும் பக்தர்களின் வசதிக்காக வேலூரில் இருந்து
அரசு போக்குவரத்து கழகம்
சார்பில் நன்செய் இடையாறு
மகா மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்
பட்டு வருகிறது. திருவிழா விற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மகாமாரியம்மன் கோவில் எட்டுபட்டி ஊர் தர்மகர்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- முருகன் கோவில்களில் பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன்படி பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோயில், அணிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில்,
பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில், கு.அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில் உள்ள முருகன்,நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், காவேரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி,, மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர், உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது . இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- நாமக்கல் ச.பே.புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை பரமத்தி பிரதான சாலையின், இருபுறமும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
- நடுவில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை தொடர்ந்து இடைவெளியின்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட வி.சி.க மற்றும் திரளான பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் ச.பே.புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை பரமத்தி பிரதான சாலையின், இருபுறமும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையின் நடுவில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை தொடர்ந்து இடைவெளியின்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம் வரை ரோட்டின் இருபுறமும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஏராளமான மருத்துவமனைகள், கோவில்கள், ஓட்டல்கள், லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் அமைந்துள்ளன.
இடைவெளியின்றி அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளால், அன்றாட தேவைக்காக சாலையைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டிய பொதுமக்கள், சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு மேல் சென்று திரும்பும் சிரம நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சாலையின் இருபுறமும், இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் செல்லும் போது, நெரிசல் ஏற்படுவதன் காரணமாக, அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நேரிடுகின்றன.
தற்போது, கோடைகாலம் என்பதால், சுட்டெரிக்கும் வெயிலில், மக்கள் நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று திரும்பி சாலையைக் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில், சாலைத் தடுப்புகளில், குறிப்பிட்ட தொலைவுக்குள் கடந்து செல்லும் வகையில் இடைவெளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது.
- பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டில் கடந்த 21-ந் தேதி இரவு வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இதில் குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது.
இதே நாளில் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கூரை வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்கள், வடகரை யாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் மண்எண்ணை குண்டுகளை வீசி சென்றனர்.
இதையடுத்து, பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய வடகரை யாத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தர்மராஜ் (30), ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் என்கிற பரமசிவம்(28), அதே பகுதியைச் சேர்ந்த கோட்டையப்பன் மகன் சுதாகர் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல்லில் ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம். இந்த மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை ஸ்ரீ நரசிம்மர் கோவில் மலையைக் குடைந்து குடவறைக் கோவிலாக உள்ளது.
மலையின் கிழக்குப்பகுதியில் அரங்க நாயகித் தாயாரோடு கூடிய ஸ்ரீ அரங்கநாதர் கோவில் குடவறைக்கோ விலாக உள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனம் கொண்ட நிலையில் அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒரே கல்லினால் உருவான மலையியின் இரண்டு புறமும் குடவறைக் கோவில்களை கொண்டு, சிறப்பு பெற்ற தலமாக நாமக்கல் விளங்கி வருகிறது.
கோட்டை பகுதியில், மலைக்கு மேற்குப்புறத்தில் 18 உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமக்கல் மலையையும், ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழா நாட்களில் தினசரி காலை 8 மணிக்கு நரசிம்மசுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ அரங்கநாதரும் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பகல் 11 மணிக்கு மெயின்ரோட்டில் குளக்கரை நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
7-ம் நாள் திருவிழாவான, வருகிற ஏப்ரல் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பாகும். 8-ம் நாள் திருவிழாவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபரி உற்சவம் நடைபெறும்.
9-ம் நாள் திருவிழாவில் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு கோட்டையில் ஸ்ரீ நரசிம்மசுவாமி தேரோட்டம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மெயின் ரோட்டில் அரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டம் நடைபெறும். 15-ம் நாள் உற்சவமாக வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறும்.
விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலை யத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், நாமக்கல் நகர மக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.
- ஆண்டுக்கு 3 முறை நடத்திட தமிழ்நாடு அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- காலை 10 மணிக்கு, நாமக்கல் மோகனூர் ரோட்டில், லத்துவாடியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உளளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-
வேளாண்மையில் பாரம்பரியமிக்க உள்ளூர் ரகங்களைக் கண்டறிந்து, அதை மேம்பாட்டிற்கான, ஆய்வுகளில் பயன்படுத்தி நமது பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்து வதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆண்டுக்கு 3 முறை நடத்திட தமிழ்நாடு அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியம் மிக்க உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, நாமக்கல் மோகனூர் ரோட்டில், லத்துவாடியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உளளது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்துவதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அனுமதி அளித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், திரளாக கலந்துகொண்டு, தங்கள் பகுதி பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் வேளாண் விஞ்ஞானிகள், வீரியமிக்க குணங்களை கொண்ட ரகங்களை உருவாக்கிட பயனுள்ளதாக இருக்கும்.
ஆர்வமுள்ள விவசா யிகள் தங்கள் பகுதியில் விளைந்த, சிறந்த மருத்துவ பண்புகளைக் கொண்ட, பாரம்பரிய மிக்க, உள்ளூர் உயர் ரகங்களை காட்சி பொருளாக வழங்கி கண்காட்சியில் பங்கு கொண்டு, விவசாயம் காத்து உணவு உற்பத்தியை பெருக்கிட உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






