என் மலர்
நாமக்கல்
- நகராட்சி 23-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.
- 3வது குழந்தை காவ்யா பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 23-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.
3வது குழந்தை காவ்யா பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனே சிகிச்சைக்காக அந்த குழந்தையை தாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
குழந்தை சாவில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் குழந்தை உடலை பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சபரீஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களாக வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் அவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
- வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கடந்த சில மாதங்களாக வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் அவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். சிலர் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற போலீஸ் துறை மூலம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, லத்துவாடி கிராமத்தில் உள்ள காவேரி கோழிப்பண்ணைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியாற்றும், வட மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர்களை அச்சமின்றி பணியாற்றிட ஆலோசனைகள் வழங்கினார். அவர்களின் குடும்பத்துடன் குரூப் போட்டே எடுத்துக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கோழிப்பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களுடன் இந்தியில் பேசி கலந்து ரையாடினார். அப்போது அவர், இங்குள்ள பணி சூழல் உங்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளதா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தனர்.
மேலும் அவர், இங்குள்ள தமிழ்நாட்டு தொழிலாளிகள் நல்ல முறையில் பழகுகிறார் களா? என்றும் கேட்டறிந்தார். அதற்கு அவர்கள், இங்குள்ள மக்கள் சகோதர-சகோதரி மனப்பாங்குடன் பழகுவதாக தெரிவித்தனர். இந்த தகவலை உங்கள் சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்துங்கள் என அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, காவேரி பீட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் செந்தில், இயக்குநர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.
- உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப் படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப் படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து வரவேற்றார். நாமக்கல் வட்டார அட்மா குழு தலைவர் பழனிவேல், மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர் நவலடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தலைமை தாங்கினார்.
உயிர், உயிரியல் இடுபொருட்கள் விற்பனை இயக்குநர் ஷாலினி இயற்கை வேளாண்மையின் உன்னதங்கள், இயற்கை விதை உற்பத்தியாளர் ஆனந்த் சிறுதானியம், அருந்தானிய விதைகள் மற்றும் சாகுபடி, கொல்லிமலைசாரல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனர் ஆறுமுகம் இயற்கை இயைந்த வாழ்வு குறித்து பேசினர்.
கருத்தரங்கில் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, உதவி பேராசிரியர்கள் முருகன் (உழவியல்), சங்கர் (பூச்சியியல்), சத்யா (மண்ணியல்), பால்பாண்டி (மீன்வளம்) ஆகியோர் இயற்கை முறை பயிர் சாகுபடி முறைகள் குறித்தும், சிறுதானியங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்துதல் குறித்தும் விளக்கி பேசினர்.
கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலையருவி கிராமிய கலைக்குழுவினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் வழங்கினர். விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கூறி விளக்கம் பெற்றனர்.
இதில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அலுவலர்கள், சகோதரத் துறையின் அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விளக்கம் அளித்து பதிவேற்றம் செய்தனர்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.
- குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
- இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை, உள்ளிட்ட பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறி யாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வு தினசரி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தான கிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுபாட்டு வாரியம் உதவி பொறி யாளர்கள் சந்தானம், விஜயன் உள்பட பலர் சென்றனர்.
- அரசின் வேளாண் திட்டமான கிரெய்ன்ஸ் வெப்சைட், ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
- நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அரசின் வேளாண் திட்டமான கிரெய்ன்ஸ் வெப்சைட், ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம்.
நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களுடன் கிரெய்ன்ஸ் வெப்சைட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வெப்சைட்டில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை உள்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது.
மேலும், இந்த வலைதளத்தின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் உரிய பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். விவசாயிகள் நேரடியாக வெப்சைட்டில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்த வெப்சைட்டில் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஒப்படைத்து, கிரெய்ன்ஸ் வெப்சைட்டில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.இந்த
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.
ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பம் கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர புறத்துக்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவை விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.
இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது.
- தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக விஜயகிரி பழனியாண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனியாண்டவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் சாமி ஊர்வலமும், வரும் சனிக்கிழமை சாமி மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஞாயி ற்றுக்கிழமை அன்று சாமி யானை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், திங்கட்கிழமை திருக்கல்யாணம் உற்சவம், பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று உத்திர நட்சத்திரத்தில் காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் விஜயகிரி பழனியாண்டவர் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று மீண்டும் நிலை சேர்கிறது.
வியாழக்கிழமை அன்று கொடி இறக்கும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- பிரசித்தி பெற்ற நரசிம்மர் சாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
- இன்று காலை 11 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் சாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
இதயொட்டி இன்று காலை 11 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 6-ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நரசிம்மர் சாமி உடனுறை நாமகிரி தாயார் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளன.
இன்று முதல் தேர்த் திருவிழா வரை இரவு நேரத்தில் பலவித சிறப்பு வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடை பெறு கின்றன.
வருகிற 4-ந் தேதி நரசிம்மர்-நாமகிரி தாயார் திருக்கல்யாணம், நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் கோவில் அதிகாரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
- நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாமக்கல்:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பணியை புறக்கணித்து அரசு ஊழியர்கள் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.06 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 310 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.45-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 791-க்கு விலை போனது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 115.02 குவிண்டால் எடை கொண்ட 238 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.50-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.46-க்கும், சராசரி விலையாக ரூ.75.79-க்கும் என மொத்தம் ரூ.8லட்சத்து 57ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 184.91 குவிண்டால் எடை கொண்ட 247 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.162.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.166.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.69-க்கும் என மொத்தம் ரூ.28லட்சத்து 80ஆயிரத்து 116-க்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
அதேபோல் 195.81 குவிண்டால் எடை கொண்ட 637 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75க்கும், சராசரி விலையாக ரூ.78.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்து 739க்கு விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.52லட்சத்து 39 ஆயிரத்து 410க்கு விற்பனையானது.
- பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த கறிக்கோழிகளுக்கு பல்லடத்தில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 8 ரூபாய் குறைப்பதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 102 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 94 ரூபாயாக குறைக்கப் பட்டது. அதேபோல முட்டை கோழி உற்பத்தி யாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முட்டை கோழி விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 67 ரூபாயில் இருந்த முட்டை கோழிவிலை 60 ரூபாயாக சரிந்தது. முட்டை விலை யில் எந்த மாற்றமும் செய்யாமல் 450 காசுகளாக நீடிக்கிறது.






