என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாமக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பணியை புறக்கணித்து அரசு ஊழியர்கள் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×