என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம்  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்த 4 மாத பெண் குழந்தை மர்ம சாவு
    X

    தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்த 4 மாத பெண் குழந்தை மர்ம சாவு

    • நகராட்சி 23-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.
    • 3வது குழந்தை காவ்யா பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 23-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.

    3வது குழந்தை காவ்யா பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே சிகிச்சைக்காக அந்த குழந்தையை தாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    குழந்தை சாவில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் குழந்தை உடலை பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சபரீஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×