search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தொடரும் எலி தொல்லை
    X

    பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தொடரும் எலி தொல்லை

    • மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • இந்த மருத்துவ மனையின் ஒரு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையின் ஒரு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம் முழுவ தும் இருந்து தினசரி ஏராளமான பெண்கள் பிரசவத்திற்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலி தொல்லை அதிகம் உள்ள தாக அங்கு குழந்தையுடன் சிகிச்சை பெறும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பிரசவம் முடிந்து பச்சிளம் குழந்தைகளுடன் வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களின் உடைமைகள், குழந்தைகளுக்கான மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவு பொருட்களை அங்கு உலவும் எலிகள் கடித்து நாசம் செய்கின்றன.

    எலிகளின் கழிவுகள் குழந்தைகளின் மெத்தை விரிப்புகளில் பட்டு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்து வமனை நிர்வாகத்தினர் எலி தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×