என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு அமைப்பு"

    • நாமக்கல் ச.பே.புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை பரமத்தி பிரதான சாலையின், இருபுறமும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • நடுவில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை தொடர்ந்து இடைவெளியின்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட வி.சி.க மற்றும் திரளான பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் ச.பே.புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை பரமத்தி பிரதான சாலையின், இருபுறமும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையின் நடுவில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை தொடர்ந்து இடைவெளியின்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம் வரை ரோட்டின் இருபுறமும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஏராளமான மருத்துவமனைகள், கோவில்கள், ஓட்டல்கள், லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் அமைந்துள்ளன.

    இடைவெளியின்றி அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளால், அன்றாட தேவைக்காக சாலையைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டிய பொதுமக்கள், சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு மேல் சென்று திரும்பும் சிரம நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சாலையின் இருபுறமும், இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் செல்லும் போது, நெரிசல் ஏற்படுவதன் காரணமாக, அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நேரிடுகின்றன.

    தற்போது, கோடைகாலம் என்பதால், சுட்டெரிக்கும் வெயிலில், மக்கள் நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று திரும்பி சாலையைக் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில், சாலைத் தடுப்புகளில், குறிப்பிட்ட தொலைவுக்குள் கடந்து செல்லும் வகையில் இடைவெளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×