என் மலர்
நாமக்கல்
- எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
- பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
இங்கு கடந்த வாரம் கிலோ ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ. 480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ. 280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ. 120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ. 200-க்கும் விற்பனையானது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்க ளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது.
- மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவிதி உலா நடந்து வந்தது. நேற்று காலையில் அம்பாள் ரதத்திற்கு எழுந்த ருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், தக்கார் நந்தகுமார், ஆய்வர் கீதா மணி, பஸ் அதிபர் பரந்தா மன், நாயுடுகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேர் கதர்க்கடை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்து கொண்டே தேரை இழுத்துச் சென்றனர். நேற்று கடைவீதியில் பூக்கடை சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று மாலையில் தேரோட்டம் தொடர்ந்து நடக்கிறது. 8-ந் தேதி சத்தாபரணமும், 9-ந் தேதி வசந்தோற்சவமும் நடக்கிறது.
- நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பா ளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ. குன்னத்தூர், வடகரை யாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள் , சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.
பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
நாமக்கல்:
மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் தலைமையில் போலீசாா் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்த கனகரத்தினம் (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.
- நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
- வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளை யம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளை யம், குன்னத்தூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கபிலர்மலை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டால், மின் கம்பி செல்லும் வழியில் தென்னை மரங்கள் இருப்பதால், அடிக்கடி தென்னை மட்டை கம்பி களில் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும்போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுகிறது என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக தினசரி மின்தடை என்பது வாடிக்கையாகி விட்டது. தென்னை மரம் வழியாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி, அதற்கு பதிலாக தரமான கம்பிகள் அமைத்து மின் தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மின் வாரிய அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மின்தடையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது.
- அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், தினசரி அன்னதானம் நடக்கிறது.
குறிப்பாக சனிக்கிழமை அன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர். அன்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி செல்வர்.
இந்த நிலையில், இந்த அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.
சாப்பிட்ட எச்சில் இலை மற்றும் மீதம் வைக்கப்பட்ட உணவு, பேப்பர் கப்புகள் அப்படியே தண்ணீரில் மிதந்து வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
எனவே பாண்டமங்கலம் கோவிலில் சேரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
- இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.
இந்த பலகை நேற்று திருச்செங்கோடு பாரத வங்கி தலைமை மேலாளரால், கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் முன்னி லையில் வழங்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு சரக ஆய்வர் நவீன்ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது.
- பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.
பள்ளிபாளையம்:
கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.
இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) புவனேஸ்வரி, பாதரை பள்ளி தலைமை ஆசிரியர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்றம் கருத்தாளர் குணசேகர் மற்றும் கண்டிப்புதூர் பள்ளியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள கலந்து கொண்டனர்.
இதில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கற்பனையும் கைத்திறனும், சமையலறையில் அறிவியல் மற்றும் புதிர் கணக்குகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் அளிக்க ப்பட்டது.
- 15 வார்டுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது.
- சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது.
சாலையில் செல்லும் பொதுமக்களையும், ஆடு மற்றும் கன்று குட்டிகளையும் கடித்து வருவதால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி பாதிக்கப்பட்டவர்கள் பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரையிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. பரமத்தி கடைவீதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளா கின்றனர்.
கடந்த 1-ந் தேதி வெள்ளாளபாளையம் ராமசாமி என்பவர் வீட்டில் புகுந்த வெறிநாய், 5 ஆடுகளை கடித்ததில், அவை இறந்து விட்டது. நேற்று வெள்ளாளபாளையம் பாலக்காடு பகுதியில் ராஜா என்பவர் மாட்டு கொட்டையில் புகுந்து ஒரு நாளே ஆன கன்று குட்டியை தெரு நாய்கள் கடித்ததில், அந்த கன்று குட்டி இறந்து விட்டது.
மேலும் இந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் தினந்தோறும் நாய்கள் கடித்து விடுகிறது. எனவே பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வெறி நாய்களை, கட்டுப்படுத்த பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- மணியங்காளிபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கரடி மணி. இவரது மகன் விக்ரம் (வயது 22).
- காவிரி ஆற்று பகுதியில் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டதால் அவரை மோகனூர் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணியங்காளிபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கரடி மணி. இவரது மகன் விக்ரம் (வயது 22).
இவர் மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து விக்ரம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டதால் அவரை மோகனூர் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதை தொடர்ந்து மோகனூர் தாலுகா நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் விக்ரம் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, ஏற்கனவே உறுதி அளித்த படி செயல்படா ததாலும், மீண்டும் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்ட தாலும் அவரை நீதிபதி சுப்ரமணி, மேலும் 10 மாதங்களுக்கு ஜாமீன் இன்றி சிறையில் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து விக்ரம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.






