என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கடந்த 2 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணன் தனது மகள் திருமணத்துக்காக சேலத்துக்கு பட்டு புடவை எடுக்க குடும்பத்துடன் சென்றார்.
    • சேலத்தில் துணிகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் தத்தாதிரிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 59), பர்னிச்சர் கடை மற்றும் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணன் தனது மகள் திருமணத்துக்காக சேலத்துக்கு பட்டு புடவை எடுக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது கிருஷ்ணனின் மாமனார் பழனிசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரும் மதியம் 1 மணியளவில் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    மாலை 3 மணியளவில் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சேலத்தில் துணிகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டு பீரோவில் இருந்த 62 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து 2 மோட்டார்சைக்கிளில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை ெகாள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல், புதுச்சத்திரம் நவனி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள னர். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இரு சம்பவங்களிலும் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் 3 தனிப்படை அளிக்கப்பட் டுள்ளது. தனிப்டை போலீ சார் மர்ம நபர்களை தீவிர மாக தேடி வருகின்றனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா வில் ெகாள்ளையர்களின் முழு உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி 14, கதிரிலப்பாக்ஸி 1812, பிஎஸ்ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
    • பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

    அதேபோல் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. மிக பலத்த மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கிவிட்ட காரணமாக அக்னிவெயில் தொடங்கி யது.

    இந்நிலையில் மிகப் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால் பூமியின் சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வறண்ட கிணறுகளில் ஊற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலத்த மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையம் வாரச்சந்தையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
    • குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையம் வாரச்சந்தையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் அருகி லேயே மோட்டார் சைக்கில் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து அப்பகுதியை பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் குன்னமலை அருகே குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரி வித்து வரவழைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கதிரேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
    • கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள ஆர்.பி புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55) விவசாயி. இவர் தற்போது தனது மனைவி பொன்னி மற்றும் மகள்கள் நித்தியபிர சாதனி (13), ஆனந்தபிர சாதனி (10) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பா ளையத்தை சேர்ந்த செல்வ ராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மகளுக்கு விடு முறை என்பதால் பொன்னி தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டினத்திற்கு சென்றிருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் மனைவிக்கு போன் செய்து விவசாய நிலத்தில் வேலை இருப்பதால் உடனே புறப்பட்டு ஊருக்கு வரு மாறு கூறியுள்ளார். அப்போது மனைவி பொன்னி சில தினங்களுக்கு பிறகு வருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாதேஸ்வரன் அவரது குடிசை வீட்டிற்கு வெளியே நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

    பின்னர் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடி யாக ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு மாதேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வேலக வுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது. மேலடுக்கு காற்று சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் இந்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் படிப்படியாக குறைந்து வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கோடை மழை தொடங்கியது. சுமார் 6 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் லேசான அடை மழை தொடர்ந்து பெய்ததால், வெப்பநிலை முற்றிலம் மாறி குளிர் காற்று வீச தொடங்கியது

    இன்று அதிகாலை 5 மணி முதல் வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்து வருகிறது. லேசான அடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் குளிரான சீதோஷ்னம் தொடர்ந்து நிலவி வருகிறது. பொதுமக்கள் கையில் குடையுடன் நடனமாடி வருகின்றனர். நேற்று மாலை பெய்த கனமழையால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு-

    எருமப்பட்டி 3 மி.மீ., குமாரபாளையம் 5.40 மி.மீ., மங்களபுரம் 5.80 மி.மீ., மோகனூர் 8 மி.மீ., நாமக்கல் 28 மி.மீ., பரமத்தி வேலூர் 16 மி.மீ., புதுச்சத்திரம் 20 மி.மீ., ராசிபுரம் 22 மி.மீ., சேந்தமங்கலம் 7 மி.மீ., திருச்செங்கோடு 8 மி.மீ., நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 33.5 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.

    • 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • ஏற்றுமதி விலையும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவதால் அதற்கான கமிட்டி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் விலை அறிவிப்பு வெளியாகி வருகிறது. மே 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தினசரி விலை நிர்ணய நடைமுறையால் பண்ணையாளர்கள் நஷ்டமின்றி தங்களுடைய தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த 4 நாள்களில் 20 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதி விலையும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.105-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.83-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    • ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்து மாகாளியம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

    விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்குகளை கொண்டு சென்று மாவிளக்கு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணியளவில், முத்து மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் திருவீதி உலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள், அம்மனுக்கு தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டனர்.

    • காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைத்த முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலையில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் மாவுப்பூச்சிகள், அதனை கட்டுப்படுத்தும் முறைகள், பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைத்த முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவ சாயம் சார்ந்த களப்பணி யாளர்கள், பண்ணையார்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு வரும் விவசாயி கள், தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

    • கபிலர்மலை அருகே ரங்கம்பாளையத்தில் தங்கி, சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மில்லில் வேலை பார்த்து வந்தார்.
    • கடன் சுமை காரணமாக விரக்தியில் இருந்து வந்த மணிவண்ணன், நேற்று காலை, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 33). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே ரங்கம்பாளையத்தில் தங்கி, சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக விரக்தியில் இருந்து வந்த மணிவண்ணன், நேற்று காலை, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டு உள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மணிவண்ணனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி‌ அம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளை யத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதியம்மன், வேலூர்- கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன், பரமத்தி அங்காளம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன் கோவில், வடகரை யாத்தூர் பகவதி அம்மன், மாரியம்மன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில் களில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது.

    இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 10 நாட்களாக மண்டபக் கட்டளை முடித்து கிரிவலம் வருதல், புஷ்ப பல்லக்கு, ஸ்ரீ ஹனுமந்த வாகனம், கருட வாகனத்தில் கிரிவலம் வருதல், திருக்கல்யாண வைபவம், மாங்கல்ய காரணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் பெருமாள் மலை இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது கடந்த 10 நாட்களாக மண்டபக் கட்டளை முடித்து கிரிவலம் வருதல், புஷ்ப பல்லக்கு, ஸ்ரீ ஹனுமந்த வாகனம், கருட வாகனத்தில் கிரிவலம் வருதல், திருக்கல்யாண வைபவம், மாங்கல்ய காரணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மாலையில் நடைபெற்றது. முதலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதரான இளையபெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்டத்தை ராஜேஷ் குமார் எம்.பி. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். 4 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதையில் கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

    உப்பு, மிளகு தூவி தேரோட்டத்தை பக்தர்கள் வரவேற்றனர். இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×