என் மலர்
உள்ளூர் செய்திகள்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு
- 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- ஏற்றுமதி விலையும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவதால் அதற்கான கமிட்டி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் விலை அறிவிப்பு வெளியாகி வருகிறது. மே 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தினசரி விலை நிர்ணய நடைமுறையால் பண்ணையாளர்கள் நஷ்டமின்றி தங்களுடைய தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 4 நாள்களில் 20 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதி விலையும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.105-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.83-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
Next Story






