என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்னிச்சர் கடைக்காரர் வீட்டில் பட்டப்பகலில் 70 பவுன் நகை கொள்ளை
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணன் தனது மகள் திருமணத்துக்காக சேலத்துக்கு பட்டு புடவை எடுக்க குடும்பத்துடன் சென்றார்.
- சேலத்தில் துணிகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் தத்தாதிரிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 59), பர்னிச்சர் கடை மற்றும் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணன் தனது மகள் திருமணத்துக்காக சேலத்துக்கு பட்டு புடவை எடுக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது கிருஷ்ணனின் மாமனார் பழனிசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரும் மதியம் 1 மணியளவில் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றார்.
மாலை 3 மணியளவில் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சேலத்தில் துணிகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டு பீரோவில் இருந்த 62 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து 2 மோட்டார்சைக்கிளில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை ெகாள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
இதேபோல், புதுச்சத்திரம் நவனி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள னர். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இரு சம்பவங்களிலும் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் 3 தனிப்படை அளிக்கப்பட் டுள்ளது. தனிப்டை போலீ சார் மர்ம நபர்களை தீவிர மாக தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா வில் ெகாள்ளையர்களின் முழு உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.






