என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடன் சுமையால் தொழிலாளி தற்கொலை
- கபிலர்மலை அருகே ரங்கம்பாளையத்தில் தங்கி, சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மில்லில் வேலை பார்த்து வந்தார்.
- கடன் சுமை காரணமாக விரக்தியில் இருந்து வந்த மணிவண்ணன், நேற்று காலை, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 33). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே ரங்கம்பாளையத்தில் தங்கி, சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக விரக்தியில் இருந்து வந்த மணிவண்ணன், நேற்று காலை, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டு உள்ளார்.
அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மணிவண்ணனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






