என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷமருந்து குடித்து வாலிபர் தற்கொலை
- பரமத்தி வேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையம் வாரச்சந்தையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
- குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையம் வாரச்சந்தையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் அருகி லேயே மோட்டார் சைக்கில் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இது குறித்து அப்பகுதியை பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் குன்னமலை அருகே குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரி வித்து வரவழைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கதிரேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






