என் மலர்
நாமக்கல்
- தமிழக முதல்- அமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் தொங்கியுள்ளனர்.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்- அமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில், கடந்த ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நடப்பு, 2023-2024-ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்கள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்து அளவில் உள்ளாட்சித் தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், பள்ளி மேலாண்மை குழுவின் ஒரு பிரதிநிதி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் ஒரு அலுவலக பிரதிநிதி ஆகியோரை உறுப்பினராக கொண்ட முதன்மை குழு அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் காலை உணவு தயாரிக்க, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கட்டாயம் பதிவு செய்து, குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருப்பவர்கள் சமையல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே கிராமம் அல்லது நகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். காலை உணவு தயாரிப்பதற்கும் பரிமாறுதலுக்கும் தேவையான அடிப்படை அறிவை பெற்றிருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் படிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அப்பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது அவருக்கு பதிலாக தகுதியான வேறு சுய உதவிக்குழு உறுப்பினரை பொறுப்பாக்கப்படுவார். சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலைப்பாங்கான, தொலைதூர மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் 10-ம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் இல்லையெனில், 8-ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஆன்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உணவு தயாரிப்பதற்கான சமையல் மைய பொறுப்பாளர் பணி முற்றிலும் தற்காலிகமானது.
இப்பணிக்கு தகுதியுடைய மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மட்டுமே சமையல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
நாமக்கல் வேலை வாய்ப்பு மைய, தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.
மேலும், 2022-ல் நடந்த போலீஸ் தேர்வில் 17 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 615 காலி பணியிடங்கள் கொண்ட டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.ஐ. எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நேரடியாக நடத்தப்பட உள்ளது.
இலவச நேரடி பயிற்சி வகுப்பு, வரும், 12-ந் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
- கூடச்சேரி அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பூபதிராஜா (வயது 33), கார் டிரைவர்.
- அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பூபதிராஜா (வயது 33), கார் டிரைவர். இவர் பரமத்தி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் உள்ள சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த பூபதி ராஜாவுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூபதிராஜா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
- தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது.
- கடந்த 8-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முட்டை விலை 15 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத்தேவையில்லை.
முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்.இ.சி.சி அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-
சென்னை 505, பர்வாலா 469, பெங்களூர் 510, டெல்லி 490, ஹைதராபாத் 455, மும்பை 505, மைசூர் 515, விஜயவாடா 485, ஹொஸ்பேட் 470, கொல்கத்தா 550.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.106 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக சி.கா நிர்ணயித்துள்ளது.
- கரப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வைத்தார். வட்டக் குழு உறுப்பினர் செல்வராணி வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு செயலாளர் கந்தசாமி நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், படுகொலை செய்யப்பட்ட நித்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்தி உண்மையான குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும். நேர்மையற்று முறையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் காவல்துறையில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயின்றி தவிக்கும், நித்யாவின் 2 பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தினர்.
இதில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொறுப் பாளர்கள் கருப்பையா, கந்தசாமி, தனசேகரன், ராமச்சந்திரன், பாலசுப் பிரமணியம், குழந்தைவேல் உட்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச்செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
- கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 2.24 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட, 198 பள்ளிகளை சேர்ந்த 8,852 மாணவர்கள், 9,375 மாணவியர், மாற்று பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 18 ஆயிரத்து 228 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதினர்.
அவர்களில் 8,509 மாணவர்கள், 9,160 மாணவியர், ஒரு மாற்று பாலினத்தவர் என மொத்தம் 17 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 96.13 சதவீதம், மாணவியர் தேர்ச்சி 97,71 சதவீதம் ஆகும். மாற்று பாலினத்தவர் தேர்ச்சி 100 சதவீதம் என மொத்தம், 96.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 2.24 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 89 அரசு பள்ளிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 4.33 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிட நலப்பள்ளியில் 93.48 சதவீதம், பழங்குடியினர் நலப்பள்ளியில் 95.69 சதவீதம், சமூக நலத்துறை பள்ளியில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்தம் 87 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசு பள்ளிகள் 17 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சியில் 16ம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டில் 9ம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆவராங்காடு ராஜேஸ்வரி என்பவரின் மகளான திருநங்கை ஸ்ரேயா (வயது 20) 600-க்கு 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
பள்ளிபாளையம்:
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆவராங்காடு ராஜேஸ்வரி என்பவரின் மகளான திருநங்கை ஸ்ரேயா (வயது 20) 600-க்கு 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் பெற்ற மதிப் பெண்கள் விபரம் வருமாறு;-
தமிழ் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிக வியல் 54, கணக்கு 58, கம்ப்யூட்டர் சயின்ஸ் 59 என 600க்கு 337 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள், மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருநங்கை ஸ்ரேயா இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதவற்கு பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களின் ஊக்கு விப்பும் மற்றும் எனது தாயின் அரவணைப்பும் தான் காரணம். அரசு எனக்கு உதவி செய்தால் மேலும் பல்வேறு சாதனை களை செய்ய முடியும். என்னைப் போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வில் மேன்மை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவி ஸ்ரேயா ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் ஆவார்.
- நான் இந்த பள்ளியில் படித்தபோது என்னை 3-ம் பாலினமாக யாரும் பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
பள்ளிபாளையம்:
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மார்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை இவர் ஆவார். இந்த பள்ளியில் 378 பேர் தேர்வு எழுதிய நிலையில் 356பேர் தேர்ச்சி பெற்று 94 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
மாணவி ஸ்ரேயா ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் ஆவார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணிதம் 58, கணிணி அறிவியல் 59.
இந்த சாதனை பற்றி திருநங்கை மாணவி ஸ்ரேயா கூறியதாவது:-
நான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகள் படித்தேன். இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் நான் 337 மதிப்பெண் வாங்கி உள்ளேன். எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய தலைமை ஆசிரியரும், என்னுடைய வகுப்பு ஆசிரியர்களும், என்னுடைய பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களும், இந்த சாதனைக்கு காரணம்.
நான் இந்த பள்ளியில் படித்தபோது என்னை 3-ம் பாலினமாக யாரும் பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னை எல்லா மாணவர்கள் போல் ஆசிரியர்கள் பார்த்தார்கள். இது தான் எனக்கு படிப்பதற்கு ஊக்குவிப்பதாக இருந்துச்சு. ஆசிரியைகள், தலைமை ஆசிரியர் என்னை அடிக்கடி அழைத்து நல்லா படி என ஊக்கப்படுத்தினார்கள். இந்த பள்ளியில் படித்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது. அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும். தொடர்ந்து என் போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வின் மேன்மை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம், இன்று முதல் வருகிற 19-ந் தேதி வரை செயல்பட உள்ளது.
பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் பாஸ்போட் சைஸ் போட்டோ, 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இ-மெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ48, பதிவுக் கட்டணமாக ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும்) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு பதிவு கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் இண்டர்நெட் வழியாக செலுத்தலாம். இண்டர்நெட் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் பேங்க் டிராப்ட் மற்றும் நேரடியாக பணமாகவும் செலுத்தலாம்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் வர லாறு பாடப்பிரிவு களுக்கும், அறிவியல் பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.
- விவசாயிகளுக்கு 40 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயி களுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உள்ள கோதூர், நடந்தை, மேல்சாத்தம்பூர், ராமதேவம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிடர், பழங் குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயி களுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த மானியம் பெற விரும்பும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருச்செங் கோட்டில் உள்ள வேளாண் மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விண்ணப்பத் துடன் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்றி தழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி மானியம் முன்னு ரிமை அடிப்படையில் வழங்கப்படும் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.
- பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட யூனியன் அலுவலகம் பரமத்தியில் பரமத்தி -திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ளது.
- பேட்டரி வண்டிகள் சில மாதங்களுக்கு முன்பே பரமத்தி யூனியன் அலுவலகத்திற்கு வந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட யூனியன் அலுவலகம் பரமத்தியில் பரமத்தி -திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ளது. பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடச்சேரி, பில்லூர், மேல் சாத்தனூர், நடந்தை, மாணிக்கநத்தம் ,மணியனூர், நல்லூர், பிள்ளைகளத்தூர், குன்னமலை, ராமதேவம் உள்ளிட்ட 20 கிராம ஊராட்சிகள் உள்ளது.
கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கிராம தெருக்களுக்கு சென்று வீடு வீடாக குப்பைகளை வாங்கிச் செல்ல தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பேட்டரி வண்டி ஒதுக்கீடு செய்துள்ளது.
பேட்டரி வண்டிகள் சில மாதங்களுக்கு முன்பே பரமத்தி யூனியன் அலுவலகத்திற்கு வந்துள்ளது. பரமத்தி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டிகளை வழங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.
பேட்டரி வண்டிகள் வெயிலிலும் , மழையிலும் கிடந்து வீணாகி வருகிறது. பல லட்ச ரூபாய் மதிப்பில் மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பேட்டரி வண்டிகள் பயன்படுத்தாமல் அப்படியே போட்டுள்ளது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே கலெக்டர் பிரபு சங்கர், தலையிட்டு கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டிகளை வழங்கி பேட்டரி வண்டிகள் வீணாவதை தடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து யூனியன் அலுவலகத்தில் கேட்டபோது, பேட்டரி வண்டிகளை பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கிராம ஊராட்சிகளுக்கு கொடுக்க வேண்டும். யூனியன் அலுவலகத்தில் இது சம்பந்தப்பட்ட அலுவலர் விடுமுறையில் இருந்து வருவதால் பேட்டரி வண்டிகளை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேட்டரி வாகனங்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
- முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்இசிசி அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-495, பர்வாலா-444, பெங்களூர்-490, டெல்லி-460, ஹைதராபாத்-435, மும்பை-495, மைசூர்-495, விஜயவாடா-470, ஹொஸ்பேட்-450, கொல்கத்தா-540.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.82 ஆக நிர்ணயித்துள்ளது.






