என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழகத்திலேயே 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குணசேகரன் ஆகியோர் பாராட்டிய காட்சி
அரசு உதவி செய்தால் மேலும் பல சாதனைகள் செய்வேன்
- தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆவராங்காடு ராஜேஸ்வரி என்பவரின் மகளான திருநங்கை ஸ்ரேயா (வயது 20) 600-க்கு 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
பள்ளிபாளையம்:
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆவராங்காடு ராஜேஸ்வரி என்பவரின் மகளான திருநங்கை ஸ்ரேயா (வயது 20) 600-க்கு 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் பெற்ற மதிப் பெண்கள் விபரம் வருமாறு;-
தமிழ் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிக வியல் 54, கணக்கு 58, கம்ப்யூட்டர் சயின்ஸ் 59 என 600க்கு 337 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள், மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருநங்கை ஸ்ரேயா இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதவற்கு பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களின் ஊக்கு விப்பும் மற்றும் எனது தாயின் அரவணைப்பும் தான் காரணம். அரசு எனக்கு உதவி செய்தால் மேலும் பல்வேறு சாதனை களை செய்ய முடியும். என்னைப் போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வில் மேன்மை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






