என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி யூனியன் அலுவலகத்தில்ஊராட்சிகளுக்கு வழங்காமல் பேட்டரி வண்டிகள் நிறுத்தி வைப்பு
    X

    பரமத்தி யூனியன் வளாகத்தில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேட்டரி வண்டிகளை படத்தில் காணலாம்.

    பரமத்தி யூனியன் அலுவலகத்தில்ஊராட்சிகளுக்கு வழங்காமல் பேட்டரி வண்டிகள் நிறுத்தி வைப்பு

    • பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட யூனியன் அலுவலகம் பரமத்தியில் பரமத்தி -திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ளது.
    • பேட்டரி வண்டிகள் சில மாதங்களுக்கு முன்பே பரமத்தி யூனியன் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட யூனியன் அலுவலகம் பரமத்தியில் பரமத்தி -திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ளது. பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடச்சேரி, பில்லூர், மேல் சாத்தனூர், நடந்தை, மாணிக்கநத்தம் ,மணியனூர், நல்லூர், பிள்ளைகளத்தூர், குன்னமலை, ராமதேவம் உள்ளிட்ட 20 கிராம ஊராட்சிகள் உள்ளது.

    கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கிராம தெருக்களுக்கு சென்று வீடு வீடாக குப்பைகளை வாங்கிச் செல்ல தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பேட்டரி வண்டி ஒதுக்கீடு செய்துள்ளது.

    பேட்டரி வண்டிகள் சில மாதங்களுக்கு முன்பே பரமத்தி யூனியன் அலுவலகத்திற்கு வந்துள்ளது. பரமத்தி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டிகளை வழங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.

    பேட்டரி வண்டிகள் வெயிலிலும் , மழையிலும் கிடந்து வீணாகி வருகிறது. பல லட்ச ரூபாய் மதிப்பில் மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பேட்டரி வண்டிகள் பயன்படுத்தாமல் அப்படியே போட்டுள்ளது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கலெக்டர் பிரபு சங்கர், தலையிட்டு கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டிகளை வழங்கி பேட்டரி வண்டிகள் வீணாவதை தடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து யூனியன் அலுவலகத்தில் கேட்டபோது, பேட்டரி வண்டிகளை பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கிராம ஊராட்சிகளுக்கு கொடுக்க வேண்டும். யூனியன் அலுவலகத்தில் இது சம்பந்தப்பட்ட அலுவலர் விடுமுறையில் இருந்து வருவதால் பேட்டரி வண்டிகளை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேட்டரி வாகனங்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    Next Story
    ×