search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில்அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்
    X

    நாமக்கல் மாவட்டத்தில்அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்

    • தமிழக முதல்- அமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் தொங்கியுள்ளனர்.
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்- அமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில், கடந்த ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    நடப்பு, 2023-2024-ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்கள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்து அளவில் உள்ளாட்சித் தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், பள்ளி மேலாண்மை குழுவின் ஒரு பிரதிநிதி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் ஒரு அலுவலக பிரதிநிதி ஆகியோரை உறுப்பினராக கொண்ட முதன்மை குழு அமைக்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் காலை உணவு தயாரிக்க, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கட்டாயம் பதிவு செய்து, குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருப்பவர்கள் சமையல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே கிராமம் அல்லது நகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். காலை உணவு தயாரிப்பதற்கும் பரிமாறுதலுக்கும் தேவையான அடிப்படை அறிவை பெற்றிருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் படிக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அப்பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது அவருக்கு பதிலாக தகுதியான வேறு சுய உதவிக்குழு உறுப்பினரை பொறுப்பாக்கப்படுவார். சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலைப்பாங்கான, தொலைதூர மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் 10-ம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் இல்லையெனில், 8-ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஆன்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உணவு தயாரிப்பதற்கான சமையல் மைய பொறுப்பாளர் பணி முற்றிலும் தற்காலிகமானது.

    இப்பணிக்கு தகுதியுடைய மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மட்டுமே சமையல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×