என் மலர்
நாமக்கல்
- விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
- இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பா ளையம் ,வடகரையாத்தூர், கொத்தமங்கலம், தி.கவுண்டம்பாளையம் திடுமல், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பெரிய மருதூர் , சின்ன மருதூர், சிறு நல்லிக்கோவில் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையா ளர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2900 வரை விற்பனை செய்கின்றனர்.
வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி சூடேற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமை களில் வெல்லம் ஏலச் சந்தையில் உள்ள 13 ஏல மண்டியில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமா நிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,275 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,330 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,240 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,270 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரி வடைந்துள்ளது. வெல்லம் விலை வீழ்ச்சியால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
- பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை.
நாமக்கல்:
நாமக்கல், சேலம் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை. இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். மேலும், லாரிக்கு இன்சூ ரன்ஸ் செய்யப்பட்டிருந்த, சேலத்தில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையொட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிபடி, காணாமல் போன லாரிக்கான இன்சூ ரன்ஸ் தொகை ரூபாய் ரூ.15 லட்சத்தை தருமாறு சந்திர சேகரன் கேட்டு வந்துள்ளார்.
ஆனால் 19 மாதங்கள் கழித்து கடந்த 2021 ஜனவரி மாதத்தில் லாரி டிரைவரின் நம்பிக்கை துரோகத்தால் லாரி காணாமல் போனதாகவும், அதனால் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர் சந்திர சேகர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரி உரிமையாளருக்கு பாலிசிபடி முழு இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை லாரி காணாமல் போன 2019 ஜூன் மாதம் முதல் வட்டியுடன் சேர்த்து 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ் நிறுவ னத்தின் சேவை குறை பாட்டால் லாரி உரிமையா ளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
- வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
- மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது.
நாமக்கல்:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் கோர்ட் மற்றும் குமாரபா ளையம் கோர்ட் ஆகிய இடங்களில், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரி வினை, வாடகை விவ காரங்கள்) விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதின்றம் மூலமாக முடித்துகொள் ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமைமாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் யாருக்காவது கோர்ட்டு களில், வழக்குகள் நிலுவையில் இருந்து, அவர்கள் மக்கள் நீதி மன்றத்தை அணுகினால் வழக்குகளுக்கு சட்ட ரீதியா கவும், சமரச முறையிலும் தீர்வு காணப்ப டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.
- காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
- மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, 5 லாரிகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோ தனை மேற்கொண்டனர்.
அப்போது, தார்பாய் போடாமல் மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, 5 லாரிகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த மணல் லாரிகள், தார் பாய் போர்த்தப்பட்டு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவ்வழி யாக தார் பாய் போடாமலும், வாகனம் இயக்குவதற்கான அனுமதி சீட்டு இல்லாமலும் வந்த மற்றொரு லாரிக்கு, அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், லாரியை பறிமுதல் செய்த னர். இதேபோல், அவ்வழி யாக வந்த கார் ஒன்றை சோ தனை மேற்கொண்டதில், சொந்த காரை வாடகைக்கு இயக்கியது தெரியவந்தது.
அந்த காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.
இதனிடையே, மணல் லாரிகள் தார் பாய் போடா மல் இயக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
- முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.
- அப்போது எதிரே அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பூபதிராஜா (வயது 33), கார் டிரைவர். இவர் பரமத்தி அருகே உள்ள அர்த்தனாரி பாளையம் பகுதியில் உள்ள சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த பூபதி ராஜாவுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூபதிராஜா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 80.89 1/2 குவிண்டால் எடை கொண்ட 21 ஆயிரத்து 573 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.79-க்கும், சராசரி விலையாக ரூ.25.25-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 90ஆயிரத்து 639-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 216.34 1/2 குவிண்டால் எடை கொண்ட 438 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.88.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.86.19-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.26-க்கும், சராசரி விலையாக ரூ.77.16-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து ஆயிரத்து 50-க்கு விற்பனையானது.
எள்
259.77 குவிண்டால் எடை கொண்ட 348 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.134.29-க்கும், சராசரி விலையாக ரூ.156-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.134.29-க்கும், சராசரி விலையாக ரூ.154-க்கும் என மொத்தம் ரூ.38லட்சத்து 60ஆயிரத்து 560-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 57லட்சத்து52 ஆயிரத்து 249-க்கு விற்பனையானது.
- முருக கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 70). இவர் வசந்தபுரத்தில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
- திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், ராஜூ மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மேல்சாத்தம்பூர் அருகே முருக கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 70). இவர் வசந்தபுரத்தில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
திருச்செங்கோடு - பரமத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், ராஜூ மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சை
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜூ உயிரி ழந்தார்.
கார் பறிமுதல்
இதுகுறித்து ராஜூவின் மனைவி சிவகாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய குமா ரபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து, குமரேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக் கைகள் குறித்து, மொத்தம், 348 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரி சீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.
தொடர்ந்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தின் மூலம், உயர்கல்வி தொடர்வ தற்காக, நிதி உதவியாக தன் விருப்புரிமை நிதியில் இருந்து, 3 மாணவ, மாணவி யருக்கு, தலா ரூ. 20 ஆயிரம் வீதமும், 4 மாணவிகளுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், மொத்தம் 7 மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, நாபின்ஸ் நிறுவனம் சார்பில், தலா ரூ. 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில், 50 பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டி எந்தி ரங்கள், நிறுவனத்தின் பொது மேலாளர் மோகன் பிரசாத் முன்னிலையில் வழங்கப்பட்டது.
அதையடுத்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களைப் பெற்று, துறை அலுவலரிடம் வழங்கிய கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆதி திராவிட விவசாயிகளுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆகையால் விருப் பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வீரணம்பாளையம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, பிராந்தகம் ஆகிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச் சித்திட்ட கிராமங்களில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆதி திராவிட விவசாயிகளுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியத்திலும், பண்ணைக்குட்டை மற்றும் பவர்டில்லர், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் விருப் பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங் களுக்கு உதவி வேளாண்மை இயக்குநர் பரமத்தி அலுவ லகத்தை தொடர்பு கொள்ளு மாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்
- தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது.
- இத்தேர்வில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 154 மாணவர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இத்தேர்வில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 154 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 145 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது, 94 சதவீதம் தேர்ச்சி.
இப்பள்ளியில் முதல் மதிப்பெண் 600க்கு 516, 2-ம் மதிப்பெண் 506, 3-ம் மதிப்பெண் 496. மேலும், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில், 6 மாணவர்கள், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல், பல்வேறு பாடங்களில், 7 மாணவர்கள் 95 மதிப்பெண்களுக்கு மேலும், 30 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 மாண வர்கள் 500 மதிப்பெண் களுக்கு மேலும், 12 மாண வர்கள் 450-க்கு மேலும், 40 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன், உதவி தலைமையாசிரிர் ஜெகதீசன், ஆசிரியர்கள், பி.டி.ஏ., பள்ளி மேலாண் குழு, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
- மாணவ, மாணவிகள் தங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, கைவிரல் ரேகை பதிவு செய்து, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கலாம்.
- இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில், 2022-–23-ம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெறும் வகையில், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், இதுவரை ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று, அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவ, மாணவிகள் தங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, கைவிரல் ரேகை பதிவு செய்து, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கலாம். அந்த கணக்கு எண் மூலம் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






