பரமத்தி அருகே கல்லூரி பஸ்-கார் பயங்கர மோதல்;டிரைவர் உடல் நசுங்கி பலி

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.அப்போது எதிரே அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
பரமத்தி அருகே கல்லூரி பஸ்-கார் பயங்கர மோதல்;டிரைவர் உடல் நசுங்கி பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பூபதிராஜா (வயது 33), கார் டிரைவர். இவர் பரமத்தி அருகே உள்ள அர்த்தனாரி பாளையம் பகுதியில் உள்ள சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த பூபதி ராஜாவுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூபதிராஜா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com