search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Order to pay compensation"

    • இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை
    • இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்ததாக நாமக்கல், திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ள கடைகளின் மீது ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகள் உட்பட 53 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நேற்று நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ரூ.1 லட்சம் இழப்பீடு

    நாமக்கல்லில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் 6 பேக்கரி உரிமையாளர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கடை உரிமையாளர்கள், கோவையில் உள்ள 2 கடை உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.1 லட்சம் இழப்பீடு செலுத்தினர். இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

    மற்றொரு வழக்கு

    நாமக்கல்லில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதில் விற்பனை செய்த பொருட்கள் திரும்ப வாங்கப்படமாட்டாது என அச்சிடப்பட்டது தவறு என நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடை உரிமையாளர் நுகர்வேருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார்.

    மற்றொரு வழக்கில் நாமக்கல்லில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வாடிக்கையாளரிடம் கேரி பேக் கொடுத்ததற்கு ரூ.10 வசூலித்தது தவறு என தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூ.2,000 செலுத்தியது. முதல் சுற்று பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத சில வழக்குகள் 2-வது சுற்று பேச்சு வார்த்தைக்காக வரும் அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
    • பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை. இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். மேலும், லாரிக்கு இன்சூ ரன்ஸ் செய்யப்பட்டிருந்த, சேலத்தில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையொட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிபடி, காணாமல் போன லாரிக்கான இன்சூ ரன்ஸ் தொகை ரூபாய் ரூ.15 லட்சத்தை தருமாறு சந்திர சேகரன் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் 19 மாதங்கள் கழித்து கடந்த 2021 ஜனவரி மாதத்தில் லாரி டிரைவரின் நம்பிக்கை துரோகத்தால் லாரி காணாமல் போனதாகவும், அதனால் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர் சந்திர சேகர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரி உரிமையாளருக்கு பாலிசிபடி முழு இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை லாரி காணாமல் போன 2019 ஜூன் மாதம் முதல் வட்டியுடன் சேர்த்து 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.

    இன்சூரன்ஸ் நிறுவ னத்தின் சேவை குறை பாட்டால் லாரி உரிமையா ளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

    • தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
    • எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் ராமசாமி மகன் தங்கவேல் (வயது 43). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.28,25,000-ஐ தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

    ஒவ்வொரு மாதமும் கடனுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    இந்த பிரச்சினை குறித்து தங்கவேல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில், தனியார் நிதி நிறுவனத்தினர், எவ்வித முன் அறிவிப்பும் செய்யா மல், லாரியை பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற னர். மேலும் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட லாரியை, ரூ.7 லட்சத்து 60 ஆயிரத் துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். தன்னிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து கொண்ட தால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ.23 லட்சம் நிவாரணமும், நிதி நிறுவனத்தின் செயல்க ளால் ஏற்பட்ட சிரமங்க ளுக்கு ரூ.5 லட்சம் நிவார ணமும் வழங்க வேண்டும் என்று வழக்கில் தங்கவேல் கேட்டிருந்தார்.நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து வாதங்களை கேட்ட நிலை யில் கடந்த வாரம் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலை யில், நீதிபதி ராமராஜ் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், சட்டவிரோதமாக வாக னத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதும், ரூ.30 லட்சம் மதிப்புடைய அந்த லாரியை ரூ.7,60,000-க்கு, விற்பனை செய்துள்ளதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டது.

    மேலும் தவறான முறை யில் வாகனம் விற்கப்பட்ட பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் இன்சூ ரன்ஸ் புதுப்பிக்கப்படா மலும் வாகனம் பயன்ப டுத்தப்பட்டு வந்துள்ளது என்பதும் வழக்கில் உறுதிப்ப டுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு தனியார் நிதி நிறுவ னம் ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை, 12 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று நுகர் வோர் கோர்ட்டு சம்மந்தப் பட்ட நிதி நிறுவ னத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • ஏற்காட்டில் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தன்.
    • வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2018-ம்

    ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தன். இவர் கொளகூர் பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரின் நிலப்பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த சென்றார். அப்போது ராமதுரையை சமூகத்தை குறிப்பிட்டு தரகுறைவாக, பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி ராமதுரை தரப்பில் மாநில மனித உரிமை ஆணையத்தின் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் வழங்கவேண்டும் என்றும், அந்த தொகையை ஆய்வாளரிடம் இருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×