என் மலர்
நாமக்கல்
- காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார்.
- நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 64). இவர், காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் குடி சையில் இருந்து வெளியில் வரவில்லை. இதையடுத்து, தீவனம் இன்றி கால்நடை களும் கத்தத் தொடங்கின. அதனைக்கேட்டு அப்பகுதி மக்கள் குடிசைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு, நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
பழனியம்மாளின் தலை யில் கல்லால் தாக்கியதில், அதிகளவில் ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிரி ழந்திருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. மகா லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கொலை நடந்த விதம் குறித்து விசா ரணை மேற்கொண்டார்.
நிர்வாண நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்க்கும் போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடிருக்கலாம் என போலீசார் தெரிவித்த னர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழுவிபரம் தெரிய வரம் என கூறினர். தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. குடிசை வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய ஸ்டெபி, மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. மேலும், நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.
2 மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள், பாப்பம்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வணா நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், அதேபோல் மற்றொரு கொலை சம்ப வம், பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
- மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னத் துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் (மா, கொய்யா, எலுமிச்சை), காய்கறி நாற்றுகள் (தக்காளி, மிளகாய், கத்தரி), விதைகள் (வெண்டை, வெங்காயம்), மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
மேலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு இயற்கை உரமும், வாழை மற்றும் பல்லாண்டு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் ஊடுபயிராக சாகுபடி செய்திட விதைகள் மற்றும் உயிர் உரங்களும் மானி யத்தில் வழங்கப்பட உள்ளது.
வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்திட ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி அல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆல யத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பூஜை நடந்தது.
- அதனை தொடர்ந்து பூக்க ளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆல யத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவ ருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பூக்க ளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பர மேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறில் உள்ள திருவே லீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரை யில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்திவேலூர் எல்லை யம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜய கிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரை யாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்ட மங்கலம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சித்திரை மாத கடைசி தேய்பிறை அஷ்ட மியை முன்னிட்டு காலபைர வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது.
- நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன்கள் வளர்த்து பிடித்து விற்பனை செய்து கொள்வதற்காக, ஒவ்வொரு வருடமும் கபிலர்மலை யூனியன் அலுவலகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு குளத்தில் மீன்கள் வளர்ந்து பிடிக்க ரூ. 60 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எடுத்தவர், சிறுநல்லிக் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவருக்கு அதை கொடுத்துள்ளார். இதையடுத்து ராஜூ சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு வளர்த்து மீன்பிடித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த மீன்பிடி குத்த கைதாரர், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலை யரசன், ஜேடர்பாளையம் மீன்வளத்துறை ஆய்வாளர் கோகிலவாணி மற்றும் மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
மர்மநபர்கள் யாராவது குளத்தில் விஷம் கலந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜேடர்பா ளையம் அருகே கரப்பாளை யத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா, கடந்த மார்ச் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு அப்ப குதி விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், நித்யாவின் உறவினர்கள் மற்றும் அவ ரது சமூகத்தை சேர்ந்த வர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் திடீரென செத்து மிதக்கும் சம்பவம், இப்பகுதியினரி டையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பதட்டமான சூழ்நிலையில் உள்ள இந்த பகுதியை அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் டாக்டர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தனம் மற்றும் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் சஞ்சுதா மற்றும் பாலாமணி ஆகியோர் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- கிராமப்பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்பட்டு வருகிறது.
- மாணிக்கம்நத்தம் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டன.
பரமத்தி வேலூர்:
தமிழக அரசு சார்பாக கிராமப்பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அனைத்து வார்டு பகுதிகளிலும் கிடந்துள்ள குப்பைகளை அகற்றியும், தெருக்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு
- கண்ணன் வெங்கடாசலத்தை கட்டையால் தாக்கினார்.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா என்.குமாரபாளையம் அருகில் உள்ள அண்ணா மலைபட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 48). இவர் அங்குள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை யில் ரேஷன் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போவதற்காக வெளியே வந்தார்.
அப்போது நாடார் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் வெங்க டாசலத்தை கட்டையால் தாக்கினார். இதில் வெங்கடா சலத்திற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து வெங்கடாசலம் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
- தேர்வையும் சரியாக எழுதவில்லை
- கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை
பரமத்தி வேலூர்:
நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்புச்செல்வி. இவர்களுக்கு விக்னேஸ்வ ரன் (வயது 15) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
விக்னேஸ்வரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்ததுடன் தற்போது பொதுத்தேர்வும் எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவர் சரியாக படிக்கவில்லை எனவும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் சரியாக எழுதவில்லை எனவும் பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவர் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.இந்த நிலையில் விக்னேஸ்வரன் திடீரென காணாவில்லை. இதனால் அவரது பாட்டி அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறைகளில் தேடிய போது, அவர் வீட்டின் மேலே உள்ள கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் நாமக்கல்லில் உள்ள தனது மகள் அன்புச் செல்வி தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து விக்னேஸ்வ ரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என திட்டியதால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் திடீர் என்று இறந்தார்.
- ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற இடத்தில் இந்த சோகம் நிகழ்ந்தது.
ராசிபுரம்:
சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சர்வேஸ்வரன் (வயது 11). சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சர்வேஸ்வரன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்துள்ளனர். நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சர்வேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தான்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மல்லூர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேவநேசம் (வயது 40). இவர், ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
- அவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு இண்டர்நெட்டில் ஒரு லிங்க் கிடைத்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் தேவநேசம் (வயது 40). இவர், ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு இண்டர்நெட்டில் ஒரு லிங்க் கிடைத்துள்ளது. அந்த லிங்கில் பல்வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு டாஸ்க்கையும், ஒரு குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி வெற்றி பெற்றால், அதற்கு தகுந்தாற்போல் கூடுதல் பணம் கிடைக்கும் என்றும், இதை பகுதிநேர வேலையாக செய்யலாம் என்றும் தகவல் வந்தது.
அதை உண்மை என நம்பிய தேவநேசம், அவ்வப்போது இண்டர்நெட் மூலம் மொத்தம் 21 டாஸ்க் விளையாடியுள்ளார். அதற்காக அவர் ரூ. 8.23 லட்சம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளார். அதையடுத்து, தனக்கு வரவேண்டிய பணத்தை அனுப்புமாறு ஆன்லைனில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. பணமும் வரவில்லை.
இதானல் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், தேவநேசம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் நகைக்கடை ஊழியரிடம், ரூ.8.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது.
- மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது. இதற்காக மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி ஆகிய பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடங்களில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சர்வே பணிகளை தொடங்கி உள்ளனர்.
இப்பகுதியில், அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், சிப்காட் அமைந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விளை நிலங்கள் பாழ்படும். விவ சாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்துக்கு, அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழு ஆரம்பித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, முட்டியிட்டு ஆர்ப்பாட்டம், கறவைமாடு ஒப்படைப்பு போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என, பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வளையப்பட்டியில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், விவசாயி கள் கலந்துகொண்டனர்.
- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
- சிறுவர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா வின் சுற்றுவட்டார பகுதிக ளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள தால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களை, சிறு வர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்ற னர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்ப டுகின்றனர். சில நேரங்களில் வாகனங்களை கட்டுப்ப டுத்த முடியாமல் சாலையில் விழுந்து காய மடைகின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், போலீசார் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்தி வேலூரில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆ ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறுகையில், இரு சக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறுவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படு கிறது. சிறுவர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனத்தை பெற்றோர்கள் கொடுத்து விடுகின்றனர்.
எனவே இருசக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறு வர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.






