search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "capture"

    • உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படம்.
    • ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.

    இயக்குனர் லோஹித்.ஹெச் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கேப்சர்'. இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்கா நடிக்கிறார். சிவராஜ்குமாரின் டகரு படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத், மாஸ்டர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பாண்டிக்குமார் கவனிக்க, படத்தொகுப்பை ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.



    உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான படம் இது. அதுமட்டுமல்ல இப்படம் உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்றும் கூட. ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.

    இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் மிகுந்த ரத்தக்காயங்களுடன் காணப்படும் ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    • காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார்.
    • நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 64). இவர், காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் குடி சையில் இருந்து வெளியில் வரவில்லை. இதையடுத்து, தீவனம் இன்றி கால்நடை களும் கத்தத் தொடங்கின. அதனைக்கேட்டு அப்பகுதி மக்கள் குடிசைக்கு சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு, நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

    பழனியம்மாளின் தலை யில் கல்லால் தாக்கியதில், அதிகளவில் ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிரி ழந்திருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. மகா லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கொலை நடந்த விதம் குறித்து விசா ரணை மேற்கொண்டார்.

    நிர்வாண நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்க்கும் போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடிருக்கலாம் என போலீசார் தெரிவித்த னர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழுவிபரம் தெரிய வரம் என கூறினர். தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. குடிசை வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய ஸ்டெபி, மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. மேலும், நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.

    2 மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள், பாப்பம்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வணா நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், அதேபோல் மற்றொரு கொலை சம்ப வம், பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.
    • அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    மகாராஸ்திர மாநிலம் அவ்ரங்காபாத்தில் கடந்த ஜூலை 30-ந்தேதி வெங்காயம் லோடு ஏற்ற சென்ற சங்ககிரியை சேர்ந்த லாரியை அங்குள்ள விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.

    இதுபற்றி லாரி உரிமையாளர் திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் சி.ஆர்.சங்கரிடம் தெரிவித்தார். அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.

    இதையடுத்து லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி புக்கிங் ஏஜெண்ட்டுகள் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு வந்து தலைவர் மூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் துணை தலைவர் சி.ஆர்.சங்கருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

    • குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள அ. வல்லாளபட்டி பஸ் நிலையம், செட்டியார்பட்டி சண்முகநாதபுரம், அரியப்பன்பட்டி சிலுப்பி பட்டி, முஸ்லிம் தெரு உள்ளிட்ட 7-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதும், கடைகளில் வெளியே தொங்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும், பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது. குரங்கினால் பொதுமக்கள் படும் அவஸ்தையை கண்டு வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மதுரை மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வள்ளாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார்.

    அவருடன் தி.மு.க. பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ஆகியோர் சென்றனர்.

    ×