மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தீவிரம்

காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
Published on

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 64). இவர், காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் குடி சையில் இருந்து வெளியில் வரவில்லை. இதையடுத்து, தீவனம் இன்றி கால்நடை களும் கத்தத் தொடங்கின. அதனைக்கேட்டு அப்பகுதி மக்கள் குடிசைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

பழனியம்மாளின் தலை யில் கல்லால் தாக்கியதில், அதிகளவில் ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிரி ழந்திருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. மகா லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கொலை நடந்த விதம் குறித்து விசா ரணை மேற்கொண்டார்.

நிர்வாண நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்க்கும் போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடிருக்கலாம் என போலீசார் தெரிவித்த னர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழுவிபரம் தெரிய வரம் என கூறினர். தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. குடிசை வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய ஸ்டெபி, மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. மேலும், நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.

2 மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள், பாப்பம்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வணா நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், அதேபோல் மற்றொரு கொலை சம்ப வம், பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com