என் மலர்
நீங்கள் தேடியது "8 lakh fraud"
- தேவநேசம் (வயது 40). இவர், ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
- அவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு இண்டர்நெட்டில் ஒரு லிங்க் கிடைத்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் தேவநேசம் (வயது 40). இவர், ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு இண்டர்நெட்டில் ஒரு லிங்க் கிடைத்துள்ளது. அந்த லிங்கில் பல்வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு டாஸ்க்கையும், ஒரு குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி வெற்றி பெற்றால், அதற்கு தகுந்தாற்போல் கூடுதல் பணம் கிடைக்கும் என்றும், இதை பகுதிநேர வேலையாக செய்யலாம் என்றும் தகவல் வந்தது.
அதை உண்மை என நம்பிய தேவநேசம், அவ்வப்போது இண்டர்நெட் மூலம் மொத்தம் 21 டாஸ்க் விளையாடியுள்ளார். அதற்காக அவர் ரூ. 8.23 லட்சம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளார். அதையடுத்து, தனக்கு வரவேண்டிய பணத்தை அனுப்புமாறு ஆன்லைனில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. பணமும் வரவில்லை.
இதானல் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், தேவநேசம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் நகைக்கடை ஊழியரிடம், ரூ.8.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது






