என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சரவணன்(வயது 38). இவர் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இரவு வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய பிறகு, அங்கிருந்த ஒரு அறையில் சரவணன் தூக்கு போட்டுக் கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன்(வயது 38). இவர் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சுசீலா (33). இவர்களுக்கு சுசீந்திரன் (8), ரோகித் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் உடல்நிலை பாதிப்பால் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய பிறகு, அங்கிருந்த ஒரு அறையில் சரவணன் தூக்கு போட்டுக் கொண்டார். இரவில் திடீரென எழுந்த சுசீலா, சரவணன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சரவணன் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணனின் மனைவி சுசீலா பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், மனுக்களை விரைவாக பரிசீலித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் ஆர்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு தலா ரூ.78 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.10.92 லட்சம் மதிப்பீட்டில் இலவ வீட்டு மனைப்பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ மணிமேகலை, சமூக பாது காப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் சிமெண்டு அட்டையை உடைத்தனர்.

    பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நேற்று இரவு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜேடர்பாளையத்திற்கு வந்தார். அவர், வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சக்திகணேசன் (ஈரோடு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலை யரங்கில், மாணவர் மன்றம் தொடக்க விழா நடை பெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலை யரங்கில், மாணவர் மன்றம் தொடக்க விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமாரின், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.03 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உதவியை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கல்லூரி மாணவர் மன்றத்தினை தொடங்கி வைத்தும், கல்லூரி மாணவர்களுக்கு உதவிட விருட்சம் என்ற அமைப்பினை தொடங்கி வைத்தும் பேசியதாவது: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் மன்றத்தினையும், மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவச்செல்வங்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கிட விருட்சம் என்ற அமைப்பினையும் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த கல்லூரியில் பயின்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளமைக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ரூ.41.03 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி மருத்துவ உபகரணங்கள் வாங்கிட, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி உதவி வழங்கியுள்ளேன். அது மட்டுமல்லாது புற்று நோய் சிகிச்சைக்காகவும், கொரோனா கால சிகிச்சைக்காகவும் பல்வேறு வகைகளில் பொதுமக்க ளுக்கு உதவி செய்து வருகி றோம். இன்று தொடங்கப் பட்டுள்ள விருட்சம் எனும் அமைப்பிற்கு அவர் தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    அதேபோன்று நானும், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கமும் எங்களது ஒரு மாத சம்பளத்தை இந்த அமைப்பிற்கு நன்கொடை யாக வழங்க உள்ளோம். மாணவச் செல்வங்கள் அனைவரும் இந்த கல்லூரி காலத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நன்றாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்ல டாக்டராகி, மருத்துவ சேவை புரிந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூ ரிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை முதல்வர் வெங்கடசுப்பிர மணியன், அரசு வக்கீல் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வாரச்சந்தை நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது.
    • இதற்கு பொதுமக்கள் வர வேற்பு தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வாரச்சந்தை நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வர வேற்பு தெரிவித்தனர். பர மத்திவேலூர் சுல்தான்பேட்டையில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். தற்போது சந்தை வளாகத்தில் புதிதாக செட் அமைத்து கான்கிரீட் தளம் அமைக்க ரூ. 1 கோடியை 47 லட்ச ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.

    இதனால் வாரச்சந்தை தற்காலிகமாக பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இட மாற்றம் செய்ய வியாபாரி களிடமும், பொது மக்களி டமும் பேரூராட்சி நிர்வாகம் கருத்து கேட்டனர். பொது மக்கள் இடமாற்றம் செய்ய வரவேற்பு அளித்ததின் பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை முக்கோண பூங்காவிற்கு அருகே இடமாற்றம் செய்து நேற்று முதல் வார சந்தை நடைபெறுகிறது.இங்குள்ள பகுதிகளை இடமாற்றத்துக்காக சுத்தம் செய்யப்பட்டு கழிப்பிட வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி நிர்வாகம் செய்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- இடமாற்றம் செய்ய பலர் தடைகளை ஏற்படுத்தி வந்தனர். பழைய வார சந்தையில் கட்டிடப் பணிகள் நடப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அங்கு கட்டிட பணிகள் முடியும் வரை இதே பகுதி யில் வார சந்தை இயங்க வேண்டும் என்றனர்.

    வியாபாரிகள், விவசா யிகள் ஆதரவோடு வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையை இடமாற்றம் செய்தது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

    • பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சியம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.‌
    • சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.

    விழாவையொட்டி கடந்த 12-ந் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருவாசகம் முற்றோதலும், இரவு 7 மணிக்கு பெண் அழைப்பு நிகழ்ச்சியில் வேலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகளு டன், பூரண கும்பங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மை உடனுறை சொக்க நாதர் சுந்தரேஸ்வர பெரு மான் திருமண கோலத்திலும் மற்றும் 63 நாயன்மார்களின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மீனாட்சியம்மை உடனுறை சொக்கநாத பெருமான் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமான் திருக் கல்யாண குழுவினர், மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    • மர்ம நபர்கள், குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
    • குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து குடிசையில் ஊற்றி தீயை அணைத்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகள் நிறைய உள்ளன. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஏழை எளிய தொழிலாளர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

    இதில் ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவரது ஆலைக் கொட்டகையில் வட மாநில இளைஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து, அதில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த குடிசையில் வேலை முடிந்து வட மாநில தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள் குடிசையின் பின்புறமாக வந்து குடிசையின் ஓரத்தில் தடுப்பாக வைத்திருந்த அட்டையை உடைத்து அறைக்குள் புகுந்தனர். அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் மீது பெட்ரோலை வீசி ஊற்றி தீ வைத்தனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம், ஸ்வந்த், கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீ உடல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபாய குரல் எழுப்பினார்கள்.

    இதனிடையே மர்ம நபர்கள், குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் குடிசை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    இந்த சத்தத்தை கேட்டதும், மற்ற குடிசையில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் அலறி அடித்துகொண்டு வெளியே ஓடி வந்தார்கள். அவர்கள், தீயில் சிக்கிய இளைஞர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை கையாண்டனர். குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து குடிசையில் ஊற்றி தீயை அணைத்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.

    இதில் ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம் ஆகியோருக்கு உயிருக்கு போராடியபடி துடி துடித்துக்கொண்டிருந்தனர். ஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரும் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்திருந்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே இருந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரும் கொண்டு செல்லப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வட மாநிலத்தவர் மீது தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங், நீதிபதி, நித்யா, கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பரமத்தி வேலூர் டிஎஸ்பி கலையரசன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அருகில் குடியிருந்த மற்ற வட மாநில தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர் உள்ளிட்டோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்ட தடய அறிவியல் துறை மாவட்ட உதவி இயக்குனர் வடிவேல் தலைமையிலான குழுவினர் தீ வைத்த இடங்களில் இருந்த தீக்கிரையான பொருட்களை சேகரித்து அவற்றை சுமார் 10-க்கும் மேற்பட்ட டப்பாக்களில் அடைத்து தடய அறிவியல் ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஏவி விடப்படது. அது குடிசை மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல் வழியாக ஓடிச் சென்று நின்று கொண்டது.

    கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

    இதேபோல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களிடம் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி வாக்கு மூலம் பெற்றார்.

    மர்ம நபர்களை பிடிக்க 4-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மர்ம நபர்ளை வலைவீசி தேடிவருகின்றனர்.

    இப்பகுதியில் நடந்து வரும் தொடர் அசம்பாவி தங்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து ரோந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது.
    • இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது. இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோ றும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏல முறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செயல்ப டுகிறது. அதில் பொருட்க ளின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலை, குறைந்த பட்ச விலை, சராசரி விலையென நிர்ணயித்து பொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    தற்போது கடத்த சில வாரங்களாக வியாழக்கி ழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் மதியம் நடந்து முடிந்தவுடன் மாலையில் தாங்கள் கொண்டு வந்த தேங்காய் பருப்பு என்ன விலைக்கு போனது என விவசாயிக ளுக்கு செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிந்து கொள்வார். வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களின் ஏல விலை தெரியாமல் வெள்ளிக்கிழமை விவசாயி கள் விலையை தெரிந்து கொள்ள காலை 10.30 மணிக்கு நேரில் வந்தனர். விவசாயிகளுக்கு தகுந்த பதில் கூற அங்கு பணியில் ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக இங்கு உரிய நேரத்தில் பணிக்கு பணி யாளர்கள் வருவதில்லை. இந்த அலுவலகம் பெயருக்கு மட்டுமே செயல்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஏலம் நடைபெறு கிறது. இங்கு விவசாயப் பொருட்கள் அழுகி போகா மல் இருக்க குளிர்சா தன வசதி கிடங்கு உள்ளது. விவ சாயிகள் மற்றும் வியாபாரி கள் தாங்கள் தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதன கிடங்கில் இருந்து பொருட் களை எடுக்க முடியா மல் போன தால் அதை விவசாயிகள் பயன்படுத்த முன் வருவ தில்லை.நேற்று முன்தினம் நடந்த தேங்காய் பருப்பு ஏல நிலவரம் வெள்ளிக்கிழமை வரை ஏல நிலவரம் தெரிய வில்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இது குறித்து அங்கு இருந்த ஊழியரிடம் கேட்ட போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்சப்ளை அதிக வோல்டேஜ் வந்ததால் மின் இணைப்பில் இருந்த சாத னங்கள் பழுதாகியது. இது குறித்து மின்சார வாரியத்தி டம் புகார் அளிக்கப்பட் டுள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ெதரிவிக்கப்படும், என்றார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது.
    • 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது. இதில் 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், நீதிபதிகள் முனு சாமி, கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலை யில் வழக்கு விசாரணை நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலா ளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.இதில் விபத்து இழப்பீடு வழக்குகள், செக்மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்கு கள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகளுக்கும் சமரச முறையில் தீர்வுகாணப்பட்டது.

    நாமக்கல்லை அடுத்த செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் சரவணன் (வயது 34). இவர் ஹைட்ராலிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2021- பிப்ரவரி 17-ந் தேதி நாமக்கல் போஸ்டல் நகரில் ஒரு லாரியை பழுது பார்த்து கொண்டிருந்த போது, லாரியின் பின்பகுதி திடீரென அவர் மீது இறங்கியது. இதில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்லை அடுத்த போடி நாயக்கன்பட்டி ராசாபுதூரை சேர்ந்தவர் கார்த்திக் (36) கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அலங்கா நத்தம் பிரிவு நோக்கி பைக்கில் சென்ற போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். இந்த இரண்டு வழக்கு களையும் மூத்த வழக்கறிஞர் வடிவேல் நீதிமன்றத்தில் நடத்தி வந்தார். நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் உயிரிழந்த என்ஜினி யர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.48.18 லட்சம், படுகாயம் அடைந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு களில் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறு வதற்கான உத்தரவினை இருவரின் குடும்பத்தின ரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார். மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 2399 வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

    இதில், 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.6.57 கோடி செலுத்தி பைசல் செய்து வைக்கப்பட்டது.

    • கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வைத்து ஊர் ஊராக வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார்.
    • 3 பேர் வெங்காயத்தைகையில் அள்ளிக்கொண்டு வெங்கா யத்தை வாங்காம லும், வியா பாரம் செய்ய விடாமலும் வியாபாரி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் பூவா லூர் அருகே உள்ள பருத்திக் காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வைத்து ஊர் ஊராக வெங்காயம் வியாபாரம் செய்து வருகி றார். நேற்று பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சா லை யில் உள்ள சினிமா தியேட்டர் அருகே ஆட்டோ வில் வைத்து வெங்காயம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 பேர் வெங்காயத்தை கை யில் அள்ளிக்கொண்டு வெங்கா யத்தை வாங்காம லும், வியா பாரம் செய்ய விடாமலும் வியாபாரி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கார்த்திக்கை தரக்கு றைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன் சரக்கு ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

    இது குறித்து கார்த்திக் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து வெங்காய வியாபாரி கார்த்திக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சதீஷ்கு மார் (28), பொய்யே ரியை சேர்ந்த சிட்டிபாபு(28), நன்செய் இடையாறை சேர்ந்த கோகுல் (25) ஆகிய 3 பேர் மீதும் பரமத்திவேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ராதா வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி பரமத்தி குற்ற வியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு நீதிபதி யின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே குடும்ப தகராைற தட்டிக்கேட்ட முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

    குடும்ப தகராறு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் எல்.ஐ.சி ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). இவரது அண்ணன் மகனான விஜயகுமார் (27), சேட்டுவின் வீட்டிற்கு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

    குத்தி கொலை

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், நீங்கள் எதற்கு இதுபற்றி கேட்கிறீர்கள்? என்று கூறி, அங்கிருந்த கத்தியால் சேட்டுவை சரமாரியாக குத்தினார். இதில், சேட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர், உடனடியாக அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார், சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சேட்டுவை கொலை செய்ததது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அவரிடமிருந்து கொலைக்கு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கணவன், மனைவி வீட்டில் சண்டையிட்டதை தட்டிக் கேட்ட முதியவர், அண்ணன் மகனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.

    கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம், திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை உடன் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடை பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பரமத்திவேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் மாணிக்கவாசகர் அர்ப்பணி மன்றம் 10-ம் ஆண்டு நிகழ்வாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

    ×