என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர் எஸ்.உமா, தற்போது தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தின், திட்ட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    அவர் ஒரு சுகாதார அதிகாரியாகத் தொடங்கி, சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    தமிழ்நாடு அரசு அவருக்கு 2019-ம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணிகள் (ஐ.ஏ.எஸ்) கேடருக்குப் பதவி உயர்வு அளித்தது.

    • பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புத்தகம் படித்தல், கணினி பயன்பாடு, கதை சொல்லுதல், கைவினை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பரமத்திவேலூர் 2-ம் நிலை கிளை நூலகர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 13-ந் தேதி வெல்ல ஆலையில் தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
    • இந்தநிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 13-ந் தேதி வெல்ல ஆலையில் தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    இதில் 2 பேர் படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ரவி, பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, நேற்று பரமத்தி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், பரமத்தி மற்றும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். 

    • மாளிகைப்பாறை பூசாரி கார்மேகத்தைப் பற்றி அறிந்த ஆறுமுகம் அவரிடம் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
    • தண்ணீரிலேயே இறந்து விட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள உப்புத்துறையைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது 48). இவர் அங்குள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். மேலும் தனது தோட்டத்தில் மூலிகைகளைக் கொண்டு மனநலம் பாதித்தவர்கள், மூட்டு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

    சதுரகிரி கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள இவரது தோட்டத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (22) என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மாளிகைப்பாறை பூசாரி கார்மேகத்தைப் பற்றி அறிந்த ஆறுமுகம் அவரிடம் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.

    நேற்று மாலை அங்குள்ள தோட்டத்தில் வெங்கடேசன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்த ஆறுமுகம் அவரை மீட்க முயன்றார். கிணறு ஆழமாக இருந்தது. கிணற்றில் இருந்த படிக்கட்டில் தொங்கிபடியே வெங்கடேசன் அலறினார். உடனே ஆறுமுகம் அருகில் இருந்தவர்களை அழைத்து வருவதற்காக சென்றார்.

    ஆனால் அதற்குள் வெங்கடேசன் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மயிலாடும்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் இரவு 11 மணி வரை வெங்கடேசனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வெங்கடேசன் உடல் கயிறு கட்டி வெளியே மீட்கப்பட்டது. தண்ணீரிலேயே இறந்து விட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி கார்மேகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது.
    • ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 12-ந்தேதி ரூ.109 ஆக இருந்த கறிக்கோழி விலை, நேற்று ரூ.116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது.

    கறிக்கோழி தேவை அதிகரித்து உள்ள நிலையில் கடும் வெயிலால் அதன் எடை குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மீன்பிடி தடையால் விற்பனை தடை இன்றி நடைபெறுவதும், மைனஸ் விலை இல்லாததாலும் தற்போதைய விலையே தொடரலாம் என பண்ணையாளர்கள் என்.இ.சி.சி கமிட்டி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை அடுத்து முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது. ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கடந்த 13-ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் மர்ம நபர்கள், தீ வைத்தனர்.

    இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (22) ஆகியோர் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (19), கோகுல் (23) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகிராம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • தொட்டிபட்டியை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.

    பரமத்திவேலூர்:

    –நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை பகுதியை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகன் ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தொண்டிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே தொண்டிபட்டிபுதூரில் இருந்து வேலக வுண்டம்பட்டி நோக்கி வந்த தொட்டிபட்டியை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் ராகுல் மற்றும் நடராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராகுல் மற்றும் நடராஜ் ஆகிய இருவரும் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த வேலகவுண்டன்பட்டி போலீசார், விபத்தில் உயிரிழந்த நடராஜ் மற்றும் ராகுல் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதைத்தொ டர்ந்து அப்பகுதியில் 2 பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கடந்த, 14-ந் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலா ளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, பர மத்தி போலீஸ் நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) வழங்கி உள்ளார்.

    • இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார்.
    • பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன் (வயது 56). இவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு சுல்தான்பேட்டையில் உள்ளது.

    இந்த வீட்டை லாரி டிரைவர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இவர் கடந்த வாரம் அவர் வெளிமாநிலத்துக்கு லாரியை வாடகைக்கு ஓட்டிச்சென்றார். இதனால் வீட்டில் இவரது மனைவி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மர்மநபர்கள் 5 பேர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். வீட்டில் அந்த பெண் தனது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் வீட்டின் உள்ளே 5 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் 5 பேர் , திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அலறி அடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் வந்து கூச்சலிட்டார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வரவே சுதாகரித்துக்கொண்ட 5 பேர் தங்களது மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார். இதனால் சுல்தான்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அருள்செல்வன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் வைத்திருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 5 நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    இரவு நேரங்களில் பகவதி அம்மன் கோவில், சந்தை வளாகம் மற்றும் சேடர் தெரு ஆகிய பகுதிகளில், மர்மநபர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். இவர்களை தட்டிக் கேட்டால் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த பகுதியில் தகுந்த பாதுகாப்பு இல்லை என உடனடியாக வெளியேறி விட்டார். பரமத்திவேலூர் போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்து வரவேண்டும். அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடியிருப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்மநபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக 14 தற்காலிக போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இரவு நேரங்களில் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுடைய முகவரிகளை கேட்டு எழுதப்பட்ட பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம், முதற்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று மேலும் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 600 போலீசார் வரவழைக்கபட்டு, மொத்தம் 750 போலீசார் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறியதாவது:- ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் கள்ளசாராயம் விற்பனை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஜேடர்பாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஜேடர்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என தெரிவித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள், அங்கேயே தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, இவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கி கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவம் ஜேடர்பாளையம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதைதொடர்ந்து, ஜேடர்பாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்கையில், போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், கடந்த 14-ந் தேதி முதல் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஜேடர்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என தெரிவித்தனர்.

    • பழனிச்சாமி (வயது 41). இவர் நேற்று திருச்சி ரோட்டில் நாகராஜபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.
    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 41). இவர் நேற்று திருச்சி ரோட்டில் நாகராஜபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, லாரி உரிமையாளரான பழனிச்சாமி, குடிபோ தையில் இருந்ததாகவும், இதனால் நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படு கிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×