என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சதீஷ்குமார் (வயது 31), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி சகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
    • சதீஷ்குமாருக்கு‌ கடன் கொடுத்தவர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத் ததாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி சகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    தற்போது சதீஷ்குமார் தனது மனைவியுடன் ஓசூரில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாத்தன் என்பவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கான பணத்தில் ரூ.30 லட்சத்தை சதீஷ்குமாருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டார். மீதி ரூ.10 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் கூறப்ப டுகிறது.

    தற்கொலை முயற்சி

    இது பற்றி சாத்தன் மீது சதீஷ்குமார் ஓசூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சதீஷ்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத் ததாக கூறப்படுகிறது.

    இதனால் சதீஷ்குமார் தனது மனைவியுடன், சொந்த ஊரான ஒடுவன்குறிச்சிக்கு வந்து விட்டார். மேலும் கடன் தொல்லையால் விரக்தியில் இருந்த அவர், தனது மனைவியுடன் மண்ணெண்னை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    சிகிச்சை

    இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய நீர்வள ஆணையம் ஆண்டுதோறும் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
    • 2022-ம் ஆண்டிற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் ஆண்டுதோறும் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டிற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 கிராம பஞ்சாயத்துக்களில் கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நீர்வள பாதுகாப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் ஒரு பகுதியாக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலை களில் பாதுகாப்பு பணிகள் மற்றும் புனர மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டம் முழு வதும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 2.25 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. 1 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டம் முழு வதும் நிலத்தடி நீர்மட்டம் உயந்துள்ளது. இந்த அடிப்ப டையில் நாமக்கல் மாவட்டம் மத்திய அளவில் நீர்வள பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அள வில் 2-ம் இடம் பிடித்துள் ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    தொடர்ந்து ஜேடர்பாளை யம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

    கடந்த 13-ம் தேதி வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் ஆலை கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தொடர் அசம்பாவித சம்பவங்களால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சூழலில், நேற்று நள்ளிரவு முத்துசாமியின் மருமகன் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    அதிகாலை தோட்டத் திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சவால் விடுக்கும் மர்ம கும்பல்

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி போலீசாருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.

    பதட்டம்

    இதனிடையே அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    சமூக விரோத கும்பல்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
    • சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த டுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் அறையில் தூங்கிக் கொண்டி ருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற வர்கள் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணா மலையின் உத்தரவின் பேரில், மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை யில் கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், பிரசார பிரிவு மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பழனியப்பன், வடிவேலு, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய தலைவர் சசிதேவி, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயலாளர் சவுமியா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சண்முகம், பிரசார பிரிவு காந்தி, இளைஞர் அணி பூபதி, ரமேஷ் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலா ளர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெல்ல ஆலை கொட்டைக ளுக்கு தீ வைத்ததில் 3 டிராக்டர்கள் எரிந்து நாச மான பகுதிகளையும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்த குழுவினர் கூறும்போது, அனைத்து சம்பவங்களையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை யாக தயார் செய்து, அதனை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைக்க உள்ளோம்.

    அவர் இந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடு வார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகாவில் பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
    • வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம்,கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டுள்ளனர். வாழைத்தார் கள் விளைந்த உடன் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூர் தினசரி ஏல மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்திற்கு 500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.170-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.200 -க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    வாழைதார் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு, விவசாயிகளை கவலையடைச் செய்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வாழைத்தார் விலை சரிந்தாலும், வாங்க ஆள் இல்லாமல் திருப்பிக் கொண்டு போகும் நிலை உள்ளது. தற்போது வாழைத்தார் வரத்து அதிகமாக உள்ளது. வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்தனர். விளைச்சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும். வாழைத்தார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும், சரக்கு வாகனங்களின் வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாது. அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் சுப முகூர்த்தம் நாட்களில் விலை உயரும் என தெரிவித்தனர்.

    • வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கடந்த 13-ந்தேதி பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அடுத்த வி.புதுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கடந்த 13-ந்தேதி பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்க ளான ராஜேஷ் (19), சுகுராம் (28), யஷ்வந்த் (21), கோகுல் (23) ஆகியோர் படுகாய மடைந்தனர்.

    கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். இதில் நேற்று அதி காலை ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். மேலும் 3 பேரில் மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    உடல் ஒப்படைப்பு

    இது சம்பவம் பற்றி ஓடிசா மாநிலத்தில் உள்ள ராஜேஷின் உறவினர்க ளுக்கு போலீசாரும், தொழி லாளர்களும் தகவல் தெரி வித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து ராகேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலை யத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த நிலையில் ஒருவர் உயிரி ழந்ததை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வ ரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்ட வர் கோவிலில் உள்ள பர்வ தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிவபெருமா னுக்கும் நந்தி பெருமானுக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது.
    • முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது. அதன்படி 465 காசுகளாக இருந்த முட்டை விலை 470 காசுகளாக உயர்ந்தது.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் முட்டை விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பல இடங்களில் கள்ளச்சா ராயம் விற்பனை செய்த வர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை, போலி மதுபான விற்பனை போன்ற மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால், பொதுமக்கள் அது குறித்த தகவல்களை 88383 52334 என்ற நம்பருக்கு போன் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

    அவ்வாறு கிடைக்கும் தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், தகவல் தருபவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். இந்த செல்போன் நம்பர் மாவட்ட எஸ்.பி.யின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது.
    • வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது. இங்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், மோகனூர், பரமத்தி, வேலூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்ப நாய்க்கன் பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,870 வரையிலும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,595 முதல் ரூ.5,395 வரையிலும் விலை போனது.

    மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

    • செந்தில்நாதன் மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரியமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனுஸ்ரீ அவரது சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ்குமார்(32), மதுக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கிஷோர்குமார்(21) ஆகியோர், சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.

    அப்போது தனுஸ்ரீ நிலைதடுமாறி சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். உடனே தனுஸ்ரீ சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே ரமேஷ்குமாரும், கிஷோர்குமாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர்.

    இருப்பினும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து, ரமேஷ் குமார் மற்றும் கிஷோர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
    • இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

    இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் பணிவாய்ப்பு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×