என் மலர்
நீங்கள் தேடியது "The victim"
- வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கடந்த 13-ந்தேதி பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தனர்.
- கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அடுத்த வி.புதுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கடந்த 13-ந்தேதி பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்க ளான ராஜேஷ் (19), சுகுராம் (28), யஷ்வந்த் (21), கோகுல் (23) ஆகியோர் படுகாய மடைந்தனர்.
கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். இதில் நேற்று அதி காலை ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். மேலும் 3 பேரில் மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உடல் ஒப்படைப்பு
இது சம்பவம் பற்றி ஓடிசா மாநிலத்தில் உள்ள ராஜேஷின் உறவினர்க ளுக்கு போலீசாரும், தொழி லாளர்களும் தகவல் தெரி வித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து ராகேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலை யத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த நிலையில் ஒருவர் உயிரி ழந்ததை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.






