search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் பகுதியில் பா.ஜ.க உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு
    X

    பா.ஜ.க உண்மை கண்டறியும் குழுவினர் இளம்பெண் நித்யா கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தினர். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    ஜேடர்பாளையம் பகுதியில் பா.ஜ.க உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு

    • இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
    • சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த டுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் அறையில் தூங்கிக் கொண்டி ருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற வர்கள் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணா மலையின் உத்தரவின் பேரில், மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை யில் கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், பிரசார பிரிவு மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பழனியப்பன், வடிவேலு, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய தலைவர் சசிதேவி, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயலாளர் சவுமியா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சண்முகம், பிரசார பிரிவு காந்தி, இளைஞர் அணி பூபதி, ரமேஷ் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலா ளர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெல்ல ஆலை கொட்டைக ளுக்கு தீ வைத்ததில் 3 டிராக்டர்கள் எரிந்து நாச மான பகுதிகளையும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்த குழுவினர் கூறும்போது, அனைத்து சம்பவங்களையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை யாக தயார் செய்து, அதனை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைக்க உள்ளோம்.

    அவர் இந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடு வார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×