பரமத்திவேலூரில் வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகாவில் பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.
பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டில் விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்த காட்சி.
பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டில் விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம்,கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டுள்ளனர். வாழைத்தார் கள் விளைந்த உடன் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.

ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூர் தினசரி ஏல மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்திற்கு 500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.170-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.200 -க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வாழைதார் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு, விவசாயிகளை கவலையடைச் செய்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வாழைத்தார் விலை சரிந்தாலும், வாங்க ஆள் இல்லாமல் திருப்பிக் கொண்டு போகும் நிலை உள்ளது. தற்போது வாழைத்தார் வரத்து அதிகமாக உள்ளது. வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்தனர். விளைச்சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும். வாழைத்தார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும், சரக்கு வாகனங்களின் வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாது. அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் சுப முகூர்த்தம் நாட்களில் விலை உயரும் என தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com