நாமக்கல்லில் 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்லில் 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், மனுக்களை விரைவாக பரிசீலித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு தலா ரூ.78 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.10.92 லட்சம் மதிப்பீட்டில் இலவ வீட்டு மனைப்பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ மணிமேகலை, சமூக பாது காப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com