என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து மாத்திரை"

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் டாக்டர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தனம் மற்றும் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் சஞ்சுதா மற்றும் பாலாமணி ஆகியோர் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    முகாமில் ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    ×