என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "94 சதவீதம் தேர்ச்சி"

    • தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது.
    • இத்தேர்வில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 154 மாணவர்கள் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இத்தேர்வில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 154 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 145 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது, 94 சதவீதம் தேர்ச்சி.

    இப்பள்ளியில் முதல் மதிப்பெண் 600க்கு 516, 2-ம் மதிப்பெண் 506, 3-ம் மதிப்பெண் 496. மேலும், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில், 6 மாணவர்கள், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    அதேபோல், பல்வேறு பாடங்களில், 7 மாணவர்கள் 95 மதிப்பெண்களுக்கு மேலும், 30 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 மாண வர்கள் 500 மதிப்பெண் களுக்கு மேலும், 12 மாண வர்கள் 450-க்கு மேலும், 40 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன், உதவி தலைமையாசிரிர் ஜெகதீசன், ஆசிரியர்கள், பி.டி.ஏ., பள்ளி மேலாண் குழு, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

    ×