என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு(வயது40) மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த மாதம் 2-ந்தேதி சுஜேந்திரன், ராஜேந்திரன், ஜெயரான் மற்றும் படகு உரிமையாளர் ராமு ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 4 மீனவர்களும் இன்று காலை ஆறுகாட்டுதுறையை வந்தடைந்தனர். அவர்களை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

    மீனவர்களின் படகை இலங்கை கடற்கடையினர் வழங்காததால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    மயிலாடுதுறை அருகே கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழபட்ட மங்கலத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகுணாதேவி(வயது37) இவருக்கும், முனியசாமி என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுகுணாதேவி கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு கூரைவீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவரது குழந்கைள் வெளியூரில் தங்கி படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சுகுணாதேவி வீட்டில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. அந்த தீ வீட்டிலும் பரவியது. இதைத்தொடர்ந்து தீயில் கருகி சுகுணாதேவி பரிதாபமாக இறந்தார். வீடும் எரிந்து முற்றிலும் சேதமானது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுகுணாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் கீழபட்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்ணாபேட்டை திருக்குவளை கட்டளை பகுதியை சேர்ந்தவர் வேதையன். இவரது மகள் சுகன்யா (வய 21). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த வந்தார். அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேததி வீட்டில் தனியாக இருந்த சுகன்யா தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து விட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிசசை பலன் அளிக்காமல் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் அண்ணாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளங்களில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் உற்பத்தி உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    இலங்கை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று குமரிக்கடல் பகுதி நோக்கி நகர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நாகை மாவட்டம் முமுவதும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக நேற்று மாலை அக்கரைப்பேட்டை திடீர் நகரில் வேல்முருகன் என்ற மீனவரின் சுனாமி நிரந்தர குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த வேல்முருகனின் மனைவி வதனி, மகள் ரித்தியா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

    தொடர் மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளங்களில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் உற்பத்தி உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி அருகே ராதாநல்லூர் பகுதியில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே செல்லும் மின்கம்பி அறுந்து ரோட்டில் விழுந்து கிடந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் காலதாமதமாக வந்தனர். இதனால் அதுவரை பொதுமக்கள், அறுந்து கிடந்த மின்கம்பி அருகே பாதுகாப்பாக சுற்றிநின்று யாரும் வந்துவிடாதப்படி கண்காணித்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பியை சீரமைத்து சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் இரு தினங்களாக மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக திருவாரூரில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை சிறிது நேரம் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் மழை தூறலாக தொடங்கியுள்ளது.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ,பேரளம், பூந்தோட்டம், குடவாசல், திருவாரூர், மாங்குடி, மாவூர், பின்ன வாசல், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பாபநாசம், பூதலூர், வல்லம், செங்கிப்பட்டி, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.



    நாகூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே நாகூரை அடுத்த வடகுடி சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த இளங்கோ. இவரது மனைவி திலகவதி (வயது 43) திருவாரூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 25-ந் தேதிசென்று உள்ளார். நேற்று காலை திலகவதி வீட்டில் வந்த பார்த்த போது பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்த கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 1½ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அப்போது திலகவதி வீட்டில் எதிர்புறம் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமராவில் பதிவான சந்தேகப்படும் நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மெயின் ரோடு கல்விக்குழல் பகுதியை சேர்ந்த ஜெகபர் சாதிக் (வயது 30) என்பது தெரிய வந்தது. இதைய டுத்து ஜெகபர் சாதிக்கை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ரேவதி (வயது46). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி சம்பவத்தன்று அண்டர் காட்ட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு, உறவினர் அஜீத்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் குடை பிடித்தபடி அமர்ந்து சென்றுள்ளார். இதில் காற்றி குடை பறந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    பின்னர் மேல் சிகிக்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொருப்பு சுபாஷ் சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே சினிமா தியேட்டரில் தகராறில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாகை சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் நேற்று பிகில் திரைபடம் திரையிடப்பட்டது. இதை பார்ப்பதற்கு கோடியக்கரை மற்றும் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    திரைப்படம் ஓடி கொண்டிருந்த போது புஷ்பவனத்தை சேர்ந்த ஒருவர் ஜஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம்.

    இந்த ஐஸ்கிரீம் கோடியக் கரையைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர் மீது பட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் தரக்குறைவாக பேசி, கைக்கலப்பில் ஈடுபட்டனராம். இதில் ராஜ்குமார் தாக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுபாஷ் சந்திரபோஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், தமிழரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முருகானந்தம் (26) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இதில் சம்மந்தப்பட்ட ரகுபதி, ராஜ்குமார் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா (வயது 21). இவர் பி.காம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இளம்பெண் ரம்யா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி வாய்மேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

    இளம்பெண் ரம்யா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தனியார் மின் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகூர் அருகே ஒக்கூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உடனே வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 2 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கீழ்வேளூர் தாசில்தார் மற்றும் நாகூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி செய்தோம். அப்போது போலீசார் கேட்டு கொண்டதன் பேரில் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இதுவரை போனஸ் தொடர்பாக எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணம் தலைமையில் கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து நேற்று பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்திற்கு அரசு அறிவித்துள்ள மருத்துவக்கல்லூரி ஒரத்தூரில் அமைய மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. நோயாளிகள் மிக குறைந்த தூரத்திலும், குறைந்த நேரத்திலும் மருத்துவ வசதி பெறும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட நல்ல திட்டமாகும். எனவே மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைய பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    நாகை அருகே காரில் மது கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் மற்றும் 716 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொத்தகை மெயின் ரோட்டில் நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், திட்டச்சேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை நடத்தினர். சோதனையில் காரில் அட்டைப் பெட்டிகளில் 716 மது பாட்டில்கள் இருந்தன.

    உடனே போலீசார் காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தன்மார்கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மகேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

    நாகூரில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் கீழவீதியை சேர்ந்தவா காமராஜ்(வயது70) டெய்லர். இவரது மனைவி மாலா (65) இவர்களுக்கு சத்திய சீலன், கண்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கண்ணன் சென்னையில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். சத்தியசீலன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    காமராஜிம், மாலாவும் மனமொத்த தம்பதியாக இருந்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு செலுத்தி வந்தனர். இந்த நிலையில் காமராஜிக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் சுருண்டு விழுந்த அவரை மாலாவும், சத்தியசீலனும் ஒரு ஆட்டோவில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் காமராஜ் மயங்கமடைந்தார். அவர் மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததை கண்ட மாலா அதிர்ச்சி அடைந்தார். கதறி அழுத அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட சத்தியசீலன் ஆட்டோவை வேகமாக ஓட்டி செல்ல வைத்து நாகை அரசு ஆஸ்பத்திரியை சென்றடைந்தார்.

    அவர் டாக்டரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்ததும் காமராஜ், மாலாவுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சத்தியசீலன் பெற்றோரின் உடல்களை நாகூருக்கு எடுத்து சென்றார். ஒரே நேரத்தில் தாய்-தந்தை இறந்து விட்டதால் “என்னை அதனாதையாக்கி சென்று விட்டீர்களே” என்று கதறி அழுதார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் உறவினர்கள், ஊர் மக்களும் காமராஜ் வீட்டில் திரண்டனர். சாவிலும் இணை பிரியாத தம்பதிகளின் அன்பை சொல்லி வியந்தனர். இந்த சம்பவம் நாகூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதுபற்றி சென்னையில் வசிக்கும் காமராஜின் மகன் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெற்றோரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள புறப்பட்டு வருகிறார். அவர் வந்ததும் காமராஜ், மாலா உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து அவர்களது இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள செய்து வருகின்றனர்.

    குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம், குத்தாலம் அருகே தேரழந்தூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 65). இவர், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது குத்தாலத்தில் இண்டேன் கியாஸ் ஏஜென்சி மற்றும் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை முத்துக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.13 லட்சம் ரொக்க பணம் மற்றும் தங்க- வைர நகைகள் உள்பட மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மேற்பார்வையில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளைய ராஜா, ஆத்மநாதன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை செய்தனர்.
    ×