என் மலர்
நாகப்பட்டினம்
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிகின்றன. இதை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளன. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பலவிதமான பறவைகள் வந்து தங்கியிருந்து பின்னர் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்வது வழக்கம்.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) இந்த சரணாலயத்திற்கு தனி சிறப்பு சேர்க்கும். மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து வரும் சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரும், வரித்தலை வாத்து, ரஷ்யாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன்(ஆலா), உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா(காச்சலாத்தி), உள்ளான் வகை பறவைகள் என 247 வகை பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் அடங்கும்.
இப்படி வந்து செல்லும் பறவைகளில் உள்ளான் வகையான ஆலா மற்றும் கிரீன்சான்ங், சாங்க்பிளவர் உள்ளிட்ட 6 வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும். மற்ற அனைத்து பறவைகளும் சீசன் காலத்தில் தங்கி விட்டு சென்று விடும்.
பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் என இந்திய அரசால் கோடியக்கரையை ‘ராம்சார் சைட்’ என அறிவித்துள்ளது என்று 1976-ம் ஆண்டு முதல் கடந்த 41 ஆண்டு காலமாக இந்த பகுதியில் பறவைகளை ஆராய்ச்சி செய்து வரும் மும்பையை சேர்ந்த பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து குவிகின்றன. ஆனால் கொரோனா பரவலை தடுக்க பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் கூறியதாவது:-
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது செங்கால் நாரை, கூழைக்கடா, கடல் ஆலா ஆகியவை அதிகளவில் வந்துள்ளன. மேலும் தற்போது 42 வகையான உள்ளான்கள் வந்துள்ளன. கொசு உள்ளான், மூக்கு உள்ளான், கண்ணாடி உள்ளான், மண்டை உள்ளான், பச்சைக்கால் உள்ளான் ஆகியவை சுமார் 20 ஆயிரம் வந்துள்ளன.
ரஷ்யா, இந்தோனேஷியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறவி வகை பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. இதில் ஊசிவால் சிறவி, பனங்கொட்டை சிறவி, தட்ட அலகு சிறவி ஆகியவை அதிகளவில் வந்துள்ளன. இதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விசில் தாரா பறவையும் தற்போது வந்துள்ளன. இந்த வகை பறவைகள் கோடியக்கரை, கெம்ப்லாஸ்ட் உப்பள நீர்த்தேக்கப்பகுதி, கோவைதீவு, நெடுந்தீவு, சிறுதலைக்காடு ஆகிய பகுதிகளில் காலை வேளையில் உணவு தேடும்போது பார்க்க முடியும். தற்போது இந்த பகுதியில் குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் பறவைகள் குறைந்த அளவே காணப்படுகிறது.
பறவைகளின் அழகை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் 4 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றுதான் காண முடியும். இந்த சரணாலயத்திற்கு ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வரும் கண்ணாடி மூக்கு உள்ளான் தற்போது அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன.
பருவ காலம் முடிந்தவுடன் இந்த பறவைகள் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றன. பருவமழை நன்றாக இருந்தால் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குவளையில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுதலையானார்.
நாகை:
சட்டமன்ற தேர்தலுக்கான 100 நாள் பிரசாரத்தை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
கைது செய்தாலும் திமுகவின் பிரசார பயணம் தொடரும் என்றும், திமுகவின் பிரசாரத்தை தடுக்க அரசு முயற்சிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கக்கோரி பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
உதயநிதியின் பிரசார பயணம் நாளை திட்டமிட்டபடி தொடரும் என்றும் கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக கே.என்.நேரு கூறியுள்ளார்.

சீர்காழி அடுத்த பழையார் பகுதியில் மீனவர் விரித்த வலையில் 300 கிலோ ராட்சத திருக்கை சிக்கியது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த பழையார் பகுதியை சேர்ந்தவர் பச்சைகோட்டையன். இவர் நேற்று காலை கடலுக்கு சென்று வலைவிரித்தபோது அவரது வலையில் அதிக எடைக்கொண்ட மீன் சிக்கியது. அதனை மற்ற மீனவர்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் பழையார் துறைமுகம் பகுதிக்கு கொண்டு வந்து வலையை பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் ராட்சத திருக்கை மீன் இருந்தது. இந்த மீன் சுமார் 300கிலோ எடையுடன் இருந்தது. பழையார் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக எடைக்கொண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற முருகன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. முருகப்பெருமான் சிக்கலில் வேல்வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது. ஆகவே இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இதையொட்டி முருகன், வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி கோவிலில் நடைபெறும். அப்போது முருகனின் முகத்தில் வியர்வை துளிகள் தோன்றுவது வியக்கத்தக்க நிகழ்வாகும். இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
வழக்கம்போல் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலின் உள்பிரகாரத்திலேயே தேரோட்டம் நடந்தது.
பின்னர் திருக்கார்த்திகை மண்டபத்தில் முருகன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7.50 மணிக்கு வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் சக்திவேல் வாங்கினார். பிறகு முருகன் வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பக்தர்களை சக்திவேல் வாங்கும் காட்சியை பார்க்க அனுமதிக்க வில்லை. இதில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் நிர்வாக அதிகாரி அமநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமாவளவனை அவதூறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி தவறான கருத்தை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சீர்காழி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன், வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் திருமாவளவனை பற்றி தவறான கருத்தை முகநூலில் பதிவிட்ட செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
ஆனால் இதுநாள் வரை காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பதரகுடி காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற நிர்வாகிகள் அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் இல்லாததால் பணியில் இருந்த போலீசாரிடம் திருமாவளவன் பற்றி தவறான கருத்தை முகநூலில் பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்யவில்லை என்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
அப்போது பணியில் இருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர்.
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 7-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதி கடற்கரை கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக நேற்றும் 7-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம் அதிகமானதால் கரையோரம் வைக்கப்பட்டிருந்த படகுகளை மீட்டு ஆறு மற்றும் கடற்கரையில் இருந்து வெகு தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மக்கள் நடமாட்டம் இன்றி கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஒரு சில மீனவர்கள் வலைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீன் பிடிக்கச் செல்லாததால் மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் மீனவர்களுக்கு மழைக் கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த தொகை தற்போது ஒரு சில மீனவர்களுக்கு மட்டுமே வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மீனவர்களுக்கு இந்த நிவாரண தொகை இன்னும் கிடைக்கவில்லை. 7 நாட்களாக மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் சிரமப்படுவதால் உடனடியாக மழைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே 4 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் கப்பலில் அடிபட்டு இறந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 250 நாட்டு படகுகள், 100 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தற்போது ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும்பி கரைப்பகுதியை பலமாக தாக்கி வருகின்றன.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் துறைமுகம், மீன் ஏலக்கூடம் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகிறது. பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் மடவாமேடு என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடற்கரையில் சுமார் 4 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கடற்கரைக்கு சென்று கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வந்த வனத்துறையினர் திமிங்கலத்தை பார்வையிட்டனர். அப்போது திமிங்கலத்தின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அதன் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் இந்த திமிங்கலம் கப்பலில் அடிபட்டு இறந்ததா? அல்லது பிற திமிங்கலங்களுடன் ஏற்பட்ட மோதலில் இறந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்துக்கு வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், திமிங்கலம் இறந்து எத்தனை நாட்கள் ஆனது? என ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து கடற்கரையில் பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.
சுமார் 4 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலைந்ததால் மனவேதனை அடைந்த புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 28). இவருக்கும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டையை சேர்ந்த முருகேசன் மகள் தங்கமாரியம்மாள்(27) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் தரித்தார். ஆனால் இருமுறையும் கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் மாரியப்பனும், தங்கமாரியம்மாளும் மிகுந்த மனவேதனை அடைந்தனர். தங்களுக்கு ஒரு வாரிசு கிடைக்காதா? என்று மிகுந்த வேதனையில் ஆழ்ந்த இருவரும் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் மின்விசிறியில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
தூக்கில் மாரியப்பனும், தங்கமாரியம்மாளும் தொங்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தங்கமாரியம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி என்ற என்ஜின் இல்லையென்றால் அதிமுக என்ற ரெயில் நகராது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
சிக்கல்:
நாகை மாவட்டம் சிக்கல் பனைமேடு பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் பக்கிரிசாமியின் 52-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சிக்கல் பனைமேடு கிராமத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்தவரும், நடிகருமான ராதாரவி கலந்து கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? நாங்கள்(நடிகர்கள்) எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க.வினரை முழுமையாக தமிழக அரசு நடைபயணம் மேற்கொள்ள விடுவதில்லை. தமிழகத்தில், பா.ஜ.க. என்ற எஞ்சின் இல்லையென்றால், அ.தி.மு.க. என்ற ரெயில் நகராது. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் பா.ஜ.க. நிலையாக கால் ஊன்றும். பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து குழப்பத்தில் உள்ளனர். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் அது குறித்த கவலை எதுவும் தங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நாகையை அடுத்த நாகூரில் ஆடு திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு சொந்தமான ஆடு நேற்று வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டை திருட முயன்றனர். இதையடுத்து கணேஷ், 2 பேரையும் பிடித்து நாகூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகூரை சேர்ந்த முகமது இக்பால் மகன் முகமது நாசிக் (வயது23), திருவாரூர் மாவட்டம் அத்திகடையை சேர்ந்த முகமது உசேன் மகன் சுலைமான் (25) ஆகியோர் என்பதும், கணேஷ் வீட்டு முன்பு நின்ற ஆட்டை திருட முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நாசிக், சுலைமான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு வக்காரமாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேம்புராஜன். இவருடைய மகன் கோவிந்தராஜன் (வயது 27). இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் செல்வம் (27), ராமலிங்கம் மகன் புருஷோத்தமன்(24). நேற்றுமுன்தினம் இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் முட்டம் பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து
மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை கடந்து அவர்கள் வந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த செல்வம், புருஷோத்தமன் ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த புருஷோத்தமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோவிந்தராஜன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஆனந்தகீதன் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழ்வேளூர் அருகே சாலையோரத்தில் படுத்துக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வலிவலம் போலீஸ் சரகம் ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி ரோட்டு தெருவை சேர்ந்த ஜீவா மகன் அரவிந்த் (வயது25). இவர் கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டவர் கீரங்குடி மெயின் ரோடு பகுதியில் சாலையோரம் தலை வைத்து படுத்துக் கொண்டு செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம், அரவிந்த் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் போலீசார் அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.