என் மலர்
செய்திகள்

உதயநிதி ஸ்டாலின்
திருக்குவளையில் கைதான உதயநிதி ஸ்டாலின் விடுதலை
திருக்குவளையில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுதலையானார்.
நாகை:
சட்டமன்ற தேர்தலுக்கான 100 நாள் பிரசாரத்தை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
கைது செய்தாலும் திமுகவின் பிரசார பயணம் தொடரும் என்றும், திமுகவின் பிரசாரத்தை தடுக்க அரசு முயற்சிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கக்கோரி பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
உதயநிதியின் பிரசார பயணம் நாளை திட்டமிட்டபடி தொடரும் என்றும் கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக கே.என்.நேரு கூறியுள்ளார்.

Next Story