என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும். 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம்செய்ய ப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜ பெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி, வருகிற 17-ம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 18-ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    பேரணியில் ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியில், ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .

    மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • தேரோட்டத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் அமர்ந்தார்.
    • தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு குழகர்கோவிலில் வைகாசி மாத விசாக திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு முருக னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் அமர்ந்தார்.

    நேற்று காலை சுவாமிக்கும் 'தேருக்கும் பூஜைகள் நடந்தது. பின்னர் மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உதயம் முருகையன், சதாசிவம், ஒன்றியக்குழு துணை த்தலைவர் அறிவழகன், ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் (பொ) ராஜா , யாழ்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி,முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிவகன கசுந்தரம் குடும்பத்தினருடன் ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ற விண்ண திரும் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்துச் செல்ல தேர் வீதியுலா நடந்தது.

    பின்னர் தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடு களை வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, மலர் கொடி மற்றும் போலீசாரும், ஊர்காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர். தேரோட்ட ஏற்பாடுகளை கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி மற்றும்கோயில் செயல் அலுவலர் (பொ) ராஜா தலைமையிலான அலுவலர்களும், கிராமவா சிகளும் செய்திருந்தனர்.

    பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடியிலிருந்து பரமநல்லூர் மேனாங்குடி வரையிலான சாலை 2650 மீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளைதிரு மருகல் ஒன்றிய பொறியாளர்கள் கவிதாராணி, செந்தில் ஆகியோர் பார்வையிட்டு சாலை அகலம் மற்றும் உயரம் அரசு அறிவித்த அளவிற்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

    பின்னர் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வின்போது சாலை ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்த சேகர் என்பவரது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இரவு 11 மணி அளவில் வாய்மேடு மேற்கை சேர்ந்த செல்வகுமார்( வயது 46) மற்றும் வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்தமணிவண்ணன் (28) ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்

    அப்போது அவர்களு க்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்த வர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பிறகு இரவு11 .30 மணி அளவில்செல்வகுமார் சைக்கிளில் தனது வீட்டி ற்கு செல்லும்போது மன்னாடி நகர் செல்லும் தெற்கு ஓடை அருகில் செல்வக்குமார் சத்தம் போட்டதாகவும் அப்போது மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

    அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோ தனை செய்துவிட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    • பாலம் கட்டுமான பணி மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பய த்தங்குடி வளப்பாற்றில் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூ தனூர், நத்தம், வீரபெரு மாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பாலம் கட்டும் பணியால் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆசிரியர்கள் தம்பதி தாங்கள் பணியாற்றும் பள்ளி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
    • பல நேரங்களில் பள்ளிகளில் தூய்மை பணி செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 137மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நீலமேகம் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் அவரது மனைவி கவிதாவும் ஆசிரியையாக பணியாற்றுகிறார். தம்பதி தாங்கள் பணியாற்றும் பள்ளியை எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதற்காக பல நேரங்களில் பள்ளிகளில் தூய்மை பணி செய்துள்ளனர்.

    தற்போது 1 மாதத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களாக நீலமேகம், கவிதா பள்ளியை சுத்தப்படுத்தி வந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை தூய்மை செய்தல், வகுப்பறைகளை தண்ணீர் மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், கரும்பலகைகளை சரி செய்தல், பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்தல், தீயணைப்பான் கருவிகளை புதுப்பித்தல், வகுப்பறையில் உள்ள லைட் மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இணைந்து செய்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது:-

    இந்த பள்ளி கூடத்தை எங்கள் வீடு போல் நினைத்து நாங்களே சுத்தம் செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மன திருப்தி கிடைக்கிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளை எங்கள் குழந்தைகளாக நினைத்து அவர்களது நலன் கருதி தொடர்ந்து இப்பணிகளை நாங்கள் பணியாற்றும் வரை மேற்கொள்வோம் என்றனர்.ஆசிரியர் தம்பதியினரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கு வதாக பொதுமக்கள் பாராட்டினர்.

    கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி களுக்கான 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகூர் நகர்மன்ற உறுப்பினர் தியாகு செய்திருந்தார்.

    இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், நாகூர் சித்திக் , ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பைச் சார்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் சமீபத்தில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    அதனடிப்படையில் கீழ்வேளூர் அருகே கூட்டுக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த தமிழ்மாறன், தனராஜ், ஹரிஹரன், குருபாலன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தொடர் கொள்ளை மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×