search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியை தூய்மை செய்யும் ஆசிரியர்கள் தம்பதி
    X

    அரசு உதவி பெறும் பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தம்பதி.

    அரசு பள்ளியை தூய்மை செய்யும் ஆசிரியர்கள் தம்பதி

    • ஆசிரியர்கள் தம்பதி தாங்கள் பணியாற்றும் பள்ளி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
    • பல நேரங்களில் பள்ளிகளில் தூய்மை பணி செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 137மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நீலமேகம் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் அவரது மனைவி கவிதாவும் ஆசிரியையாக பணியாற்றுகிறார். தம்பதி தாங்கள் பணியாற்றும் பள்ளியை எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதற்காக பல நேரங்களில் பள்ளிகளில் தூய்மை பணி செய்துள்ளனர்.

    தற்போது 1 மாதத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களாக நீலமேகம், கவிதா பள்ளியை சுத்தப்படுத்தி வந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை தூய்மை செய்தல், வகுப்பறைகளை தண்ணீர் மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், கரும்பலகைகளை சரி செய்தல், பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்தல், தீயணைப்பான் கருவிகளை புதுப்பித்தல், வகுப்பறையில் உள்ள லைட் மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இணைந்து செய்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது:-

    இந்த பள்ளி கூடத்தை எங்கள் வீடு போல் நினைத்து நாங்களே சுத்தம் செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மன திருப்தி கிடைக்கிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளை எங்கள் குழந்தைகளாக நினைத்து அவர்களது நலன் கருதி தொடர்ந்து இப்பணிகளை நாங்கள் பணியாற்றும் வரை மேற்கொள்வோம் என்றனர்.ஆசிரியர் தம்பதியினரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கு வதாக பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×