என் மலர்
நாகப்பட்டினம்
- கூட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி,மீட்டர்வட்டி,தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால் சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கந்துவட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தில் கந்து வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் வேதாரணியம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா, வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி, தலைஞாயிறு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேதார ணியம் தலைஞாயிறு, வாய்மேடு, கரியாபட்டினம் சுற்றுவட்டார பொது மக்களும் கலந்து கொ ணண்டனர். கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி மீட்டர்வட்டி தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால். சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர் மேலும் கந்து வட்டி சம்பந்தமான பல பிரச்சினைகளை குறித்து பொதுமக்கள் ேபசினர்.கூட்ட முடிவில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் பேசுகையில்:-
கந்து வட்டி சம்பந்தமான எந்த புகார் வந்தாலும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்சப்படமால் புகார் அளிக்கலாம் புகார் அளித்தவுடன் உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர்.
- குளத்தில் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்தது மட்டுமல்லாமல் மூட்டையாக கழிவு பொருட்களை குளத்தில் போடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது இதில் 50க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர் நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டுஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் உள்ள குளங்கள் மீன் ஏலம் விடுவதற்கு உள்ள உரிமை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி ஆலயத்திற்கும்.குளம் ஏரிகள் ஆக்கிரமிக்க ப்பட்டால் அதை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினரிடமும் உள்ளது மேலும் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டால் அதை நகராட்சி நிர்வாகமும் சரி செய்கிறது
இந்த நிலையில் வேதாரணியம் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் கடைவீதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளித்தின் நீரை பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து உள்ளது மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருட்களை குளத்தில் போட்டுவிடுகிறார்கள் இதனால் துர்வாடை வீசுகிறது இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது
நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் சுற்றி உள்ள பகுதியில் இருந்து கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது ஒரு காலத்தில் புனித தீர்த்த குளமாக இருந்து இப்பொழுது கொசு உற்பத்தி மையமாக திகழ்கிறது.அறநிலைதுறை, வருவாய்துறை நகராட்சி என மூன்று நிர்வாகத்தில் உள்ள இந்த குளங்கள் பெரும்பாலும் தூய்மைபடுத்த படமால் உள்ளது தற்போது நகராட்சி நிர்வாகம் மக்கள்நலன்கருதி தூய்மைபடுத்த நினைத்தா லும் அறநிலைதுறையின் அனுமதி தேவைபடுகிறது இதனால் குளங்கள் பாரமரிப்பு இன்றி பல குளங்கள் சாக்கடைகளாக மாறிவருகிறது
தற்போது மழைநீர்வடிய அரியாண்டி குட்டையில் ரூ.10 லட்சம் செலவில் வடிகால்வாய்க்கால் அமைத்துள்ளனர் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யமால் வடிகால் மட்டும் கட்டி எந்த பயனும் இல்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரியாண்டிகுளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு போலகம் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் எரவா ஞ்சேரி ஊராட்சி துறையூ ரில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலத ண்டாயுதம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி பெருவிழாவில்நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது
வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது குழகர் கோவில் என்னும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா ஜூன்-5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கடந்த 13ம் தேதி நடைபெற்றதுநேற்று பௌர்ணமி விசாக நாளில்இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு முருகன் எழுந்தருளி சென்று தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வாக்குவாதத்தில் மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மேலபட்டினச்சேரி மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பு மீனவர்கள் தடுத்துள்ளனர்
மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்த மீன்களை சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி சரவணன் நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்ஆகியோர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர்அப்போது போலீசா ருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுக த்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கு சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறு த்தியுள்ளனர்.அதனை தொடர்ந்து மேல பட்டினச்சேரி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலை யில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் ஏலத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து நாகூர் துறைமு கத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வேதாரண்யம் ஆர்.டி.ஓ பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டார்.
- ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில்கடந்த 7ஆம் தேதி முதல்வேதாரண்யம் ஆர்.டி.ஓ. பெளலின் தலைமையில்ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜமாபந்தியில் நேற்று வரை 244மனுக்கள் பெறப்பட்டு அதற்கான உடனடி திர்வும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தகட்டூர் தாணிக்கோட்டகம் ,வாய்மேடு, தென்னடார் பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது இதில் 55 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுமுதியோர் உதவித்தொகை வழங்க ப்பட்டது.வழக்கமாக கோட்டாட்சி யர்கள் பொதுமக்களிடம் மனுக்களை நாற்காலியில் அமர்ந்தபடி தான் வாங்கி வருவது வழக்கம் ஆனால் வேதாரணியம் கோட்டாட்சியர் பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்ப ளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று
கொண்டு பெற்றுக் கொண்டு இருக்கும் போது தென்னடார் ஊராட்சி மனுக்கள் பெறும் நேரம் வந்தது அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல்நிலை சரி இல்லாமல் நடந்து வந்தார்இதை பார்த்த கோட்டாட்சியர் பெளலின் உடனடியாக அவரை நாற்காலியில் அமரச் செய்தார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அமர மறுத்து விட்டார் பிறகுகோட்டாட்சியர் பெளலின் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல் நிலையை கருத்தில் கொண்டுவற்புறுத்தி அவரை தனது அருகே நாற்காலியில் அமரச் செய்தார்.
பிறகுதான் தான் நின்று கொண்டே பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார் ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மனுக்களை பெற்றுகிராம நிர்வாக அலுவலரைவீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் இந்த மனிதாபிமான செயலை வருவாய்த்துறை ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்ஜமாபந்தி முகாமில் தாசில்தார் ரவிச்ச ந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேதையன் மண்டலதுணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.
- பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
- பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும். 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம்செய்ய ப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜ பெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி, வருகிற 17-ம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 18-ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியில், ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
- பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .
மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- தேரோட்டத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் அமர்ந்தார்.
- தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு குழகர்கோவிலில் வைகாசி மாத விசாக திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு முருக னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் அமர்ந்தார்.
நேற்று காலை சுவாமிக்கும் 'தேருக்கும் பூஜைகள் நடந்தது. பின்னர் மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உதயம் முருகையன், சதாசிவம், ஒன்றியக்குழு துணை த்தலைவர் அறிவழகன், ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் (பொ) ராஜா , யாழ்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி,முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிவகன கசுந்தரம் குடும்பத்தினருடன் ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ற விண்ண திரும் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்துச் செல்ல தேர் வீதியுலா நடந்தது.
பின்னர் தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடு களை வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, மலர் கொடி மற்றும் போலீசாரும், ஊர்காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர். தேரோட்ட ஏற்பாடுகளை கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி மற்றும்கோயில் செயல் அலுவலர் (பொ) ராஜா தலைமையிலான அலுவலர்களும், கிராமவா சிகளும் செய்திருந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடியிலிருந்து பரமநல்லூர் மேனாங்குடி வரையிலான சாலை 2650 மீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளைதிரு மருகல் ஒன்றிய பொறியாளர்கள் கவிதாராணி, செந்தில் ஆகியோர் பார்வையிட்டு சாலை அகலம் மற்றும் உயரம் அரசு அறிவித்த அளவிற்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
பின்னர் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வின்போது சாலை ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.






