என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடனுதவி வழங்க வேண்டும்.
    • எனவே அடுத்த கூட்டத்திற்கு அந்த அதிகாரிகள் வரவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பெளலின் தலைமையில் நடந்தது. தாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்பாஸ்கரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளான தலைஞாயிறு பாஸ்கரன், கமல் ராம், தாணிக்கோட்டகம் காளிதாஸ், தகட்டூர் கணேசன் உட்பட ஏராளமான விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பற்றாகுறை, வடிகால் பகுதிகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி வாய்கால்கள் தூர்வாரபட வேண்டும், உழவு மான்யம், டீசல் மான்யம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடனுதவி வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உதவக்கூடிய முக்கிய அரசு துறைகளான பொதுப்பணித்துறை, வடிகால் வாரியம், வேளாண்மை போன்ற துறை உயர்அதிகாரிகள் கூட்டங்களுக்கு வராமல் விவசாயிகளை புறக்கணிக்கின்றனர்.

    எனவே அடுத்த கூட்டத்திற்கு அந்த அதிகாரிகள் வரவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்து ஒருமித்த குரலில் கூறினர்.

    இதற்கு பதிலளித்து பேசிய ஆர்டிஓ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்ட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகள் கூட்டத்துக்கு வராத துறை அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.துணை தாசில்தார்கள் வேதையன் வரவேற்றார்.ரமேஷ் நன்றி கூறினார்.

    • இந்த இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் - இருக்கை சாலையில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது அந்த இடத்தில் மண் குவாரி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மண் எடுக்கப்படும் இடத்திற்கு வந்த குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலம் விளைநிலங்கள் அருகில் உள்ளதால் அந்தப் பகுதியில் மண் எடுக்க கூடாது என்று ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சு வார்த்தையில் இது சம்பந்தமாககீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.அதுவரை அந்த பகுதியில் மண் எடுக்க கூடாது என்று போலீசார் கூறினர் இதையடுத்து கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒளிமயமான ‘ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன.
    • இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வேதாரண்யம் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி முன்னாள்தலைவர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர் .

    அதில் ஒளிமயமான 'ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன. இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
    • 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

    ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

    • 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
    • அரசு ஆணைப்படி முதலுதவி பெட்டி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கதவு, வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, மற்ற வசதிகளும் இருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 21ம் தேதி மாவட்டத்திலுள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலரும் சேர்ந்து 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வு பணியில் ஆர்.டி.ஓ, மாவட்ட காவல் துணை சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அரசு ஆணைப்படி மஞ்சள் நிறத்திலும், முதலுதவிப் பெட்டி, படிக்கட்டு வசதி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கதவு, குழந்தைகள் அமர்வது, பேக்குகள் வைக்க இடம், வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, மற்ற வசதிகளும் இருக்க வேண்டும்.

    இவை இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மோட்டார் வாகன அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார். ஆய்வு பணிக்கு வராத பள்ளி வாகனங்கள் பொது சாலையில் பள்ளிக் குழந்தைகளை வைத்து இயக்கினால் வாகனம் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • காடந்தேத்தியில் அரசு மீள் குடியிருப்பில் உள்ள குடியிருப்புகளுக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
    • குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள காடந்தேத்தியில் அரசு மீள் குடியிருப்பில் 190 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் மயான கட்டிடம், மயான சாலை வேண்டியும், வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கிட வேண்டடியும்ஊ ராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜூ, வேதாரண்யம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் , கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணிநேரம் நடந்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் தலைஞாயிறு- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கின.
    • நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகளிடம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சித்திரவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கின. கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்து 630 பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தலைமை காவலர்கள் தேவராஜ், சரோஜினி உள்ளிட்ட போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நாகை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர், தலைமை காவலர் தேவராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்களையும் இட மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    • விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஸ்ரீபூர்ணாம்பிகா, ஸ்ரீபுஷ்களாம்பிகா சமேத காஞ்சியப்பர் சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 13-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகளும் மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

    கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனைகளுக்குப் பின்னர் தகட்டூர்ஞானசேகர சிவம், சபரிநாத சிவாச்சாரரியார்கள் தலைமையிலான குழுவினர் பூஜீக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமி, அம்பாள், முருகன், சப்தகன்னியர் உப்பட பரிவார சன்னதி கோயில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிக்கும் மகா அபிஷேகமும் நடந்தது.

    பூஜை மற்றும் விழாக்களில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா, கோவில் திருப்பணி குருவினர்கள் மேரிகாந்த், அன்பழகன், சிவஞானம், செந்தில்குமார், திராவிடமணி உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராம வாசிகளும் உபயதாரர்களும் கலந்து கொண்டனர். இரவு புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குழுவினாரின் நிகழ்ச்சி நடந்தது.

    • பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக்பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • உரம் உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து புதுமனைத்தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வரும் மாணவி வேளாங்கண்ணிக்கு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அடுத்த புலவநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வேளாங்கண்ணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்று வந்தவர்.

    கடந்த 12-ம் தேதி வேளாங்கண்ணி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் காயத்ரியின் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சக்திவேல் திட்டச்சேரி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கல்வி உபகரணங்களான ஆங்கில பட அட்டைகள், தமிழ் பட அட்டைகள், தன்னார்வலர் கையேடு, மற்றும் இல்லம் தேடி கல்வி வாசிப்பு இயக்க கதைப்புத்தகங்கள் ஆசிரியர்களிடம் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் 125 தொடக்க, நடுநிலை பள்ளிகளைச் சேர்ந்த 533 இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் பொருட்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார் முன்னிலையில் வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் வழங்கினார்.

    வழங்கப்பட்ட கல்வி உபகரணங்களான ஆங்கில போஸ்டர்கள் ஆங்கில பட அட்டைகள்,தமிழ் பட அட்டைகள், தன்னார்வலர் கையேடு, மற்றும் இல்லம் தேடி கல்வி வாசிப்பு இயக்க கதைப்புத்தகங்கள், - 2 கணக்கு போஸ்டர்கள் பட அட்டைகள் போன்ற வைகளை வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் சம்ப ந்தபட்ட ஆசிரிய ர்களிடம் வழங்கினார். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்களும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கருப்பம்புலம் சித்திரவேலு வட்டார வளமையமா வட்ட பயிற்றுநர் நீலமேகம் உட்பட குழுவினர் செய்திருந்தனர். 

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
    • மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வாய்க்கால் வழியாக சென்று மேற்கண்ட 250 ஏக்கர் விளைநிலங்களை பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது. இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளைநிலங்களில் உட்புகாமல் இருக்க இந்த வாய்க்காலில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

    புதிய பாலம் அமைக்கும் பணிக்காக தடுப்பணை இடிக்கப்பட்டது. மீண்டும் தடுப்பணை அமைக்காமல் வெறும் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வாய்க்கால் வழியாக சென்று மேற்கண்ட 250 ஏக்கர் விளைநிலங்களை பாதிக்கும் அபாய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் இந்த வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கும் வரைப்படம் மட்டுமே உள்ளது எனவும், தடுப்பணை அமைக்க வரைபடம் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகளிடம் கூறியதாக தெரிவிக்கின்ற னர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தோட்டக்குடி வாய்க்காலில் தடுப்பணை அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×