search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
    X

    வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

    வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

    • கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடனுதவி வழங்க வேண்டும்.
    • எனவே அடுத்த கூட்டத்திற்கு அந்த அதிகாரிகள் வரவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பெளலின் தலைமையில் நடந்தது. தாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்பாஸ்கரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளான தலைஞாயிறு பாஸ்கரன், கமல் ராம், தாணிக்கோட்டகம் காளிதாஸ், தகட்டூர் கணேசன் உட்பட ஏராளமான விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பற்றாகுறை, வடிகால் பகுதிகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி வாய்கால்கள் தூர்வாரபட வேண்டும், உழவு மான்யம், டீசல் மான்யம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடனுதவி வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உதவக்கூடிய முக்கிய அரசு துறைகளான பொதுப்பணித்துறை, வடிகால் வாரியம், வேளாண்மை போன்ற துறை உயர்அதிகாரிகள் கூட்டங்களுக்கு வராமல் விவசாயிகளை புறக்கணிக்கின்றனர்.

    எனவே அடுத்த கூட்டத்திற்கு அந்த அதிகாரிகள் வரவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை முடக்கி, கூட்ட அறையை பூட்டி போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்து ஒருமித்த குரலில் கூறினர்.

    இதற்கு பதிலளித்து பேசிய ஆர்டிஓ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்ட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகள் கூட்டத்துக்கு வராத துறை அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.துணை தாசில்தார்கள் வேதையன் வரவேற்றார்.ரமேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×