search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை அருகே மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    மணல் குவாரியில் மண் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் ஜே.சி.பி சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

    நாகை அருகே மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • இந்த இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் - இருக்கை சாலையில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது அந்த இடத்தில் மண் குவாரி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மண் எடுக்கப்படும் இடத்திற்கு வந்த குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலம் விளைநிலங்கள் அருகில் உள்ளதால் அந்தப் பகுதியில் மண் எடுக்க கூடாது என்று ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சு வார்த்தையில் இது சம்பந்தமாககீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.அதுவரை அந்த பகுதியில் மண் எடுக்க கூடாது என்று போலீசார் கூறினர் இதையடுத்து கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×