என் மலர்
நாகப்பட்டினம்
- கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
- வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுதொகையும்,சுழற்கோப்பையும் வழங்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமழை மா.சு.மணிநினைவு கபாடி கழகம் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடக்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
போட்டிகளில் முதல் பரிசு ரூ. 30,099 நாகப்பட்டினம் அணியினரும், இரண்டாவது பரிசு ரூ. 25,099 ஆறுகாட்டுத்துறை அணியினரும், மூன்றாவது பரிசு ரூ. 20,099 வடமழை மா.சு.மணி நினைவு கபாடி கழகத்தினரும், நான்காம் பரிசு ரூ. 15,099 அக்கரைப்பேட்டை அணியிணரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையோடு சுழற்கோப்பையும் வழங்கபட்டது. விழாவின் முடிவில் கவி இளவரசன் நன்றி கூறினார்.
- ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி எழுதுவதை நோக்கமாக கொண்டு ஒரே அணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
- கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.
நாகப்பட்டினம்:
திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டார–வாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜ–புரம், ஆலத்தூர், திருச்–செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் வாயிலாக கிராமங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பி டப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
- ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூரில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ள ஜனாதிபதி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். 'அக்னிபாத்' திட்டம் மோசடி திட்டம்.
இந்த திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும். அதனால்தான் இந்த திட்டத்தை பா.ஜ.க. கூட்டணியை தவிர மற்ற அனைவரும் எதிர்க்கின்றனர்.
ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க.வை பா.ஜ.க. தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி அதை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஒரு மாற்று அணி வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே உஷா ராணியின் கால் சிக்கிக்கொண்டது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து எந்திரத்தின் உதவியுடன் உஷா ராணியின் காலை வெளியே எடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போது ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படும்.
ஆஸ்பத்திரிக்குள் செல்ல 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நுழைவு வாயில்களில் கால்நடைகள் நுழையாதபடி அகழி அமைத்து அதன் நடுவே இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காரைக்காலை சேர்ந்த உஷா ராணி என்பவர் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே உஷா ராணியின் கால் சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் அவரால் காலை எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து எந்திரத்தின் உதவியுடன் உஷா ராணியின் காலை வெளியே எடுத்தனர். இதில் காயமடைந்த உஷாராணி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது.
- பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரணயம்அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சி யில் பெரியகோவில்பத்து கண்எறிந்தான்கட்டளை பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது. ஆனால் இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களாக முற்றிலும் வரவில்லை
இதனால் பொதுமக்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர் .பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்க வில்லை இதை கண்டித்தும் குடிதண்ணீர் கேட்டும்பெண்கள் காலிகு டங்களுடன் சாலைமறியல் ஈடுபட்டனர்.
சாலைமறியலில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏரளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீர் கேட்டு முழக்கமிட்டனர்.கடந்த ஒரு மணி நேரமாக குடிநீர் அதிகாரிகள் வராத தால் போலீசார் சமாதானம் செய்தும் ஏற்காமல்சாலை யில் அமர்ந்து தொட ர்ந்து மறியலில்ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை யைமறியலால் வேதார ண்யத்தில் இருந்து பிராந்தியங்கரை வழியாக திருத்துரைப்பூண்டு செல்லும் ஒரே ஒரு பேரு ந்தை மறியல் செய்து சாலையில் அமர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடு பட்டு வருகின்றனர்.
- பொதுத்துறை நிறுவனமான (சி.பி.சி.எல்) சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
- பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை வாங்கவும் விற்கவும் உள்ள தடைகளை நீக்கி பத்திர பதிவுகள் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் பனங்குடி இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான (சி.பி.சி.எல்) சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் திருமணம் மற்றும் உயிரிழப்பு போன்ற நேரங்களில் தங்களது சொத்துக்களை அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாத சூழல் நிலவுவதால் நாகூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை வாங்கவும் விற்கவும் உள்ள தடைகளை நீக்கி பத்திர பதிவுகள் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து பலர் கொண்டனர்.
- பிரதாபராமபுரம் கிராமத்தில் 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
- பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சரவணன், சாந்தி சரவணன் மற்றும் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் 100 குடும்பங்களுக்கு 6 அடி உயரமுள்ள பலா மரக்கன்று, 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பிரியங்கா ஒருங்கிணைத்தார். பயனாளி களுக்கு லெட்சுமணன், சிவாகார்த்திக், அழகேசன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினர். சரவணன் பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்கிறார்.
- உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.
- உயர் அழுத்த மின்கம்பிகள் 6 அடி உயரத்தில் செல்வதால் விவசாயிகள் டிராக்டரை வயலிற்கு கொண்டு செல்லமுடியாத நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வழியாக கும்பகோணம், பூந்தோட்டம், மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் மெயின் சாலை உள்ளது.கணபதிபுரம், இடையாத்தாங்குடி, சேஷமூலை, கிடாமங்கலம், ஏர்வாடி, போலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால்- பூந்தோட்டம் சாலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.மேலும் அந்த வழியாக செல்லும் லாரி, வேன், கார், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை உள்ளது.தற்போது குறுவை நெல் சாகுபடி வேலைகள் நடைபெறுவதால் உயர் அழுத்த மின்கம்பிகள் 6 அடி உயரத்தில் செல்வதால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் விவசாய பணிகளை செய்ய விவசாயிகள் டிராக்டரை வயலிற்கு கொண்டு செல்லமுடியாமலும் அவதிக்கு ள்ளப்பட்டு ள்ளனர்.
இதுகுறித்து சம்பந்த ப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடி க்கையும் எடுக்கவில்லை எனவும் பெரும் விபத்து கள் ஏற்படுவதற்குமுன்பு தாழ்வாக செல்லும் மின்க ம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்மாற்றியையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
- மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பாலைவன தடுப்பு தினம் மற்றும் வறட்சி தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 1994 முதல் ஐநா சபையின் அறிவுறுத்தலின்படி இந்த நாள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.
பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்பிளேண்டிட் நர்சரி பள்ளி, கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சார்பாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
- நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர்சர்மா, நவீன்ஜிண்டாவை கைது செய்ய வலியுறுத்தினர்.
- இதேபோல் தைக்கால் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்தார்.
சீர்காழி:
சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர்சர்மா, நவீன்ஜிண்டாவை கைது செய்ய வலியுறுத்தி சிறப்பு தொழுகை முடிந்ததும் சீர்காழி தாலுக்கா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் முன்பு ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இயங்கங்கள் ஒன்று சேர்ந்து முகம்மது நபியை இழிவாக பேசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் சீர்காழி போலீசில் மனு அளித்தனர். இதேபோல் தைக்கால் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்தார். சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகம்மதுயூசுப் கண்டன முழக்கங்களை எழுப்பினனார்.பின்னர் கொள்ளிடம் போலீசில் இன்ஸ்பெக்டர் அமுதா ராணியிடம் புகார்மனு அளித்தனர்.
- இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
- நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.
நாகப்பட்டினம்:
உலக நாடுகள் மட்டு மில்லாமல், மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திருமருகலை அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில், தமிழகத்திலேயே முதல் முதலாக 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
டோரண்ட் கேஸ் நிறுவனம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தில் இதுவரை 65 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
சீயாத்தமங்கை கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து, 17 கிலோ தூரம் பூமி வழியாக 1 முதல் ஒன்றரை அடி ஆழத்தில் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போல எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. சிலிண்டரை விட பாதுகாப்பானதாக இருக்கும். கேஸ் தீரும் அச்சம், புக் செய்ய வேண்டியதில்லை, 24 மணி நேரமும் தடையில்லா கேஸ் விநியோகம் என பல அம்சங்களை கொண்ட திட்டத்தில், செலவீனமும் சிக்கனமாகும். குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயுவில், 1 கொள்ளளவு ரூ.45 வீதம் ரூ.805 மட்டுமே செலவாகும். மின்சார கட்டணம் போல இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இணைய வழியிலேயே எரிவாயு கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நுகர்வோர் அலைய வேண்டிய அவசியமில்லை.
கெயில் நிறுவனத்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படும், சமையல் எரிவாயுவானது குழாய்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வீடு கொண்டு வருவதை கண்காணிக்க 24 மணிநேரமும் தொழில்நுட்ப கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 1 லட்சத்து, 60 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று டோரண்ட் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.






