search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ground bridge"

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
    • மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வாய்க்கால் வழியாக சென்று மேற்கண்ட 250 ஏக்கர் விளைநிலங்களை பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது. இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளைநிலங்களில் உட்புகாமல் இருக்க இந்த வாய்க்காலில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

    புதிய பாலம் அமைக்கும் பணிக்காக தடுப்பணை இடிக்கப்பட்டது. மீண்டும் தடுப்பணை அமைக்காமல் வெறும் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வாய்க்கால் வழியாக சென்று மேற்கண்ட 250 ஏக்கர் விளைநிலங்களை பாதிக்கும் அபாய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் இந்த வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கும் வரைப்படம் மட்டுமே உள்ளது எனவும், தடுப்பணை அமைக்க வரைபடம் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகளிடம் கூறியதாக தெரிவிக்கின்ற னர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தோட்டக்குடி வாய்க்காலில் தடுப்பணை அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×