என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotional Slogan"

    • தேரோட்டத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் அமர்ந்தார்.
    • தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு குழகர்கோவிலில் வைகாசி மாத விசாக திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு முருக னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் அமர்ந்தார்.

    நேற்று காலை சுவாமிக்கும் 'தேருக்கும் பூஜைகள் நடந்தது. பின்னர் மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உதயம் முருகையன், சதாசிவம், ஒன்றியக்குழு துணை த்தலைவர் அறிவழகன், ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் (பொ) ராஜா , யாழ்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி,முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிவகன கசுந்தரம் குடும்பத்தினருடன் ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ற விண்ண திரும் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்துச் செல்ல தேர் வீதியுலா நடந்தது.

    பின்னர் தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடு களை வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, மலர் கொடி மற்றும் போலீசாரும், ஊர்காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர். தேரோட்ட ஏற்பாடுகளை கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி மற்றும்கோயில் செயல் அலுவலர் (பொ) ராஜா தலைமையிலான அலுவலர்களும், கிராமவா சிகளும் செய்திருந்தனர்.

    ×