என் மலர்
நாகப்பட்டினம்
- சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிய வந்தது.
- கண்காணிப்பு காமிரா மூலம் சிக்கினான்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் ஹாஜாமா வாமைதீன். இவர் அதே பகுதி சீயா மறைக்காயர் தெருவில் அமைந்துள்ள தவ்ஹீத் மஸ்ஜித் பள்ளி–வாசலில் தொழு கைக்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை பள்ளிவாசல் வாசலில் நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சை்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி–யடைந்த ஹாஜாமா வாமைதீன் அருகில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் நாகூர் காவல் நிலையத்தில் ஹாஜாமாவாமைதீன் புகார் அளித்திருந்தார் அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது நாகூரில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்ற மர்ம நபரை பிடித்து நாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து நாகூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது. சிதம்பரம் காட்டுமன்னார் குடியைச் சேர்ந்த அப்பு சலலு என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை கள்ள சாவி போட்டு திருடி செல்வது கில்லாடி என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
- பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் முதல் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசலாறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
இதனால் மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்–பட்ட அதிகாரிகள் அரசலாற்றை ஆக்கிர–மித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் அரசு மருத்துவமனை, கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.
முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நிலவழகி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பிரபாகரன், பேராசிரியர் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரிமுத்து, மாணவ- மாணவிகள் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.
- மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஏற்பாடு செய்திருந்தார்.
நாகப்பட்டினம்:
மார்கழி திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்த நாளான நேற்று நாகூரில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் பவுர்ணமி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நாளில் சித்தர்கள் பீடத்தில் யாகம் செய்து வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவால் செய்த பாவங்கள் சித்தர்கள் அருளால் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.
மாதம்தோறும் பௌர்ணமியாகத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், பழனிவேல் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவபுராணம் மற்றும் 108 மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
- மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது.
நாகப்பட்டினம்:
உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் அரைக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து கடந்த2 ம் தேதி சந்தனக்கூடு விழாவும், 3:ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெற்றது. இந்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பழம், இனிப்பு மலர்களை பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் தாம்பூலத்தில் வைத்து மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அவர்களை அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது என்றும் துவா ஓதப்பட்டது. நாகூர் ஆண்டவர் காலடியில் மலர்கள் தூவி ஆயிரந்தோனி என மீனவ மக்கள் பிரார்தனை செய்தனர்.
இது குறித்து நாகூர் தர்கா நிர்வாகி கூறும் போது நாகூர் ஆண்டவரை முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்து அரவணைத்தது மீனவ மக்கள் என்றும் அதனை போற்றும் விதமாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெறுவதாக தெரிவித்தார். நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இருந்தது அனைவரும் மத்தியிலும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- வில்வ இலை, விபூதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
- தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை பஞ்சவனநாதர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு வில்வ இலை,விபூதி,திரவிய பொடி,மஞ்சள்,அரிசி மாவு உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, ஆனந்த நடராஜ மூர்த்தி,சிவகாமி அம்மையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
- சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டவிரோதமாக கடத்திய சாராயம், மது பாட்டில்கள் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்.
உத்தரவின் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் 8 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் நாகூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4 இருசக்கர வாகனங்களில் சிக்கல் பகுதியை சேர்ந்தசிவா, சஞ்சய் மற்றும் வெளிப்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரன், சுரேந்திரன்க்ஷ, திலீப் குமார்.
ஆகிய 5 நபர்களும் சட்டவிரோதமாக 350 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தி வந்தனர் அனைத்து மது பாட்டில்களும் மற்றும் வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு நாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுவுள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
- வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார், வேளான் உதவி அலுவலர் பவித்ரா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேபிசரளா பக்கிரிசாமி, சுஜாதா ஆசைத்தம்பி மற்றும் மூத்த விவசாய முன்னோடிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபஸ்டி அம்மாள், அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், ரசுகுமாரன், ஒன்றிய மேற்பார்வையாளர் தர்மராஜன், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், வழக்கறிஞர் ஜெய்சங்கர், தி.மு.க.மாவட்ட பிரதிநிதி வீரகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நாகை மாவட்டத்தில் பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நடை பெற்றது.
- 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நிறுவனர் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது.
இதில், வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க தலைவர் அருள்ராஜ், பொதுச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட வில்வித்தை பயிற்சியாளர்கள் கார்த்தி மற்றும் வெற்றிவேல், நாகை மாவட்ட வில்வித்தை சங்க துணைத்தலைவர் குமரகுருபரன், பொரு ளாளர் ஸ்ரீராம், பயிற்சியாளர்கள் வீர ராகுல், லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.
- இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கூறியினார்.
- நோயின் முக்கியமான அறிகுறிகள் நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.
வேதாரண்யம்:
சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் பகுதியில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் பாக்டீரியா, இலைக்கருகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.
தற்போது இலைக்கருகல், நோயின் முக்கியமான அறிகுறிகள் நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.
அவ்வளவாக புலப்படாத மற்றொரு அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமான மாறுவதாகும்.
இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.
இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே இலையுறைக்கும் பரவுகிறது.
நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.
இதனை கட்டுபடுத்த வேளாண்மை துறையின ரால் பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று, நான்கு முறையாக பிரித்து மேலுரமாக இடலாம்.
யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.
நோயின் தாக்குதல் அதிகரிக்கும்போது எக்டே ருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
- அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனிதநீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த கருங்கண்ணியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் இந்த புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு தேர்பவனி நடை பெற்றது சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்ட சப்பர த்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் எம். பிரான்சிஸ் துணைத் தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் இறை மக்கள் கருங்கன்னி அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் உள்ளி ட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.






